ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசி பலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 07.10.2022

திதி : இன்று காலை 07.18 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

நட்சத்திரம் : இன்று இரவு 07.01 மணி வரை சதயம். பின்பு பூரட்டாதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 03.26 மணி வரை சூலம். பின்பு கண்டம்.

கரணம் : இன்று காலை 07.18 மணி வரை பாலவம் . பின்னர் மாலை 06.17 மணி வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை மரணயோகம். பின்னர் இரவு சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: காலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை.

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கலைத்துறை மீடியா துறை உணவுத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் வருமானத்தையும் கூடுதலாகவே கொடுத்துவிடும்.

ரிஷபம்

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.

மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும். உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்.

கடகம்

பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும்.

கன்னி

அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தனவரவு உண்டு புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு

தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும். தன வரவு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைய தாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும். புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்

நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *