ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று பைரவருக்கு உகந்த நாளாகவும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 02.10.2022

திதி : இன்று மாலை 06.38 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.59 மணி வரை கேட்டை. பின்னர் மூலம்.

நாமயோகம் : இன்று மாலை 06.31 மணி வரை சௌபாக்கியம். பின்பு சோபனம்.

கரணம் : இன்று காலை 07.47மணி வரை கரசை . பின்னர் மாலை 06.38 மணி வரை வணிசை. பின்பு பத்தரை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 10.30 முதல் 11.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகளை உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் உங்கள் வாயிலில் வந்து நிற்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவு அன்புடைய ஏதாவது இருக்கும் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனம் செலுத்தவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும். புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்

கடகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை.

சிம்மம்

தன வரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வைக்கக்கூடிய நாள் ஆகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய கல்வி வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகும். தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர் நோக்கி இருந்தாள் அவைகளில் வெற்றி உண்டாகும்.

தனுசு

நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும் இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். காதல் வலையில் இறப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். சந்திப்புகளும் உண்டு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பண புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

மகரம்

நண்பர்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம். என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும்.சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும்.உயர் கல்வி கற்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தென்படக்கூடிய நாள் ஆகும்.

மீனம்

நண்பர்களுக்கு அதிக அலைச்சல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. பணம் வருவதை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும். ஆயில் அண்ட் கேஸ் கட்டுமானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலைப்பாடு இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *