ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் கோகுந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.9.2022

திதி : இன்று அதிகாலை 12.51 மணி வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.01 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.

நட்சத்திரம் : இன்று காலை 06.31 மணி வரை விசாகம். பின்னர் அனுஷம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 02.51 மணி வரை விஷ்வகம்பம். பின்பு பரீதி.

கரணம் : இன்று அதிகாலை 12.51 மணி வரை பத்தரை . பின்னர் பகல் 11.56 மணி வரை பாலவம். பின்பு கௌலவம்.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04 45 முதல் 5.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: காலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை.

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு.

ரிஷபம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் பெண்களுக்கு இனிமையான நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்கள் திருமணத்தை பற்றி பெரியவர்களுடன் கலந்து பேசுவதற்கு நல்ல நாள் ஆகும்.

கடகம்

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியை முடித்து வேலை தேடுபவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்

சிம்மம்

இடமாற்றம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள் அவைகளில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் வெளிநாடு பயணம் மேற்கொண்டது சிறந்த மற்றும் பாதுகாப்பான பயணமாகவே அமையும்.

கன்னி

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி வடிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

துலாம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவுப்பொருட்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும் மற்ற படி சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்துவரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று காலதாமதமாக காண்பார்கள். இருப்பினும் இறுதியில் வெற்றி உண்டாகும்.

தனுசு

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்.

மகரம்

கல்வி நிலை மேம்படும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு. உங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்தாலோசிக்க இன்று நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் சுபச் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை திட்டமிடுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *