ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமையன்று முருகருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 03 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.9.2022

திதி : இன்று இரவு 10.17 மணி வரை தசமி. பின்பு ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று இரவு 10.45 மணி வரை புனர்பூசம். பின்பு பூசம்.

நாமயோகம் : இன்று காலை 09.54 மணி வரை வரீயான். பின்பு பரிகம்.

கரணம் : இன்று காலை 09.16 மணி வரை வணிசை . பின்னர் இரவு 10.17 மணி வரை பத்தரை. பின்பு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.02 மணி வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

மேஷம்

உங்கள் மனதில் இருக்கும் பழைய எண்ணங்கள் வருத்தம் அளிக்கும், பிறரின் ஆறுதல் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும். பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய தினம் செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டும், தொழிலில் புதிய முயற்சி செய்வதை யோசித்து செய்யவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகமாகும். பண வரவு இருக்கும் ஆனால் செலவு அதிகமாகும்.

மிதுனம்

உங்கள் முயற்சியில் இன்று பல தடங்கல் ஏற்படும், புதிய முயற்சிகள் வெற்றி காண பொறுமை வேண்டும். வேலையில் ஒற்றுமை தேவைப்படும். பயணத்தின்போது கவனம் வேண்டும். செல்வத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

கடகம்

நீங்கள் எதிர்பார்க்காத வெற்றி இன்று கிடைக்கும், தொழிலில் நல்ல மதிப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு பிறக்கும். சுய தொழிலில் நிலையான அங்கிகாரம் கிடைக்கும். ஓரளவு நல்ல பண வரவு உண்டு.

சிம்மம்

இன்றைய தினம் உங்கள் மனதில் ஏற்படும் தயக்கம் சிறிய குழப்பத்தை அளிக்கும். தொழில் ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பண வரவு இருக்கும், தேவையில்லாத செலவுகள் அதிகமாக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் வழக்கத்தை விட சந்தோஷமாக இருப்பீர், நீங்கள் கை வைக்கும் செயல் ஜெயமாகும். பணியிடத்தில் குறித்த வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு, வருமானம் உயரும்

துலாம்

உங்களுக்கு இன்றைய தினம் புரியாத ஒரு மனநிலை இருக்கும். ஆன்மீக நாட்டம் உதிக்கும். தொழிலில் புதிய ஐடியாக்கள் உருவாகும். உங்கள் கையில் பணப்புழக்கம் குறையும். சிறிய அளவு கடன்கள் வாங்கும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும், கவனம் சிதறும்.

விருச்சிகம்

இன்றைய தினம் தொழிலில் கிடைக்கும் வெற்றி உங்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும். பணியிடத்தில் உங்கள் புகழ் ஓங்கும், உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். பண வரவு குறைவாக இருந்தாலும் நிதி நெருக்கடி இருக்காது.

தனுசு

இன்றைய தினம் உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாகக் கோபம் வரும். தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செல்வத்தை சேமிக்க முடியும்.

மகரம்

இன்றைய தினம் உங்களுக்கு முடிக்காத காரியங்களை முடிக்க அதிகமாக அலைய வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் அதிகமாகும். அதிகமான நேரத்தை பணியில் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். நிதிநிலையில் பிரச்சனை இல்லை.

கும்பம்

உங்கள் முயற்சி பலன் சரியாக இருக்குமா என்ற குழப்பம் உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தொழிலில் வேலைகள் வழக்கம் போல் செயல்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பர். செலவு இன்று வரவைக் காட்டிலும் அதிகமாகும்.

மீனம்

இன்று பணியிடத்தில் இருக்கும் வேலை சுமை மனதிற்கு பதட்டம் அளிக்கும். உங்களின் தெளிவான திட்டம் அலுவலக பணிகளை சிறப்பாக முடிக்கும். பண வரவு குறைவாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *