ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் என்று கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.9.2022

திதி : இன்று பிற்பகல் 01.40 மணி வரை திரிதியை. பின்பு சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று காலை 10.08 மணி வரை ரேவதி. பின்பு அஸ்வினி.

நாமயோகம் : இன்று பகல் 11.04 மணி வரை விருத்தி. பின்பு துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 01.57 மணி வரை வணிசை . பின்னர் பகல் 01.40 மணி வரை பத்தரை. பின்பு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மேஷ ராசிக்கு இன்று சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை காரணமாக வெற்றி உங்களுக்கு கிடைக்கும். சமூக தொடர்பு அதிகரிக்கும் மற்றும் உங்களின் செயல்பாட்டால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சில பெரிய முதலீடுகளைச் செய்வதற்கும் நல்ல நேரம். குழந்தைகள் வகையில் ஒருவித டென்ஷன் இருக்கும். கோபம் அல்லது ஆக்ரோஷத்தை விட்டு பொறுமை மற்றும் நிதானத்துடன் பிரச்சினையை தீர்க்க முடியும். வெளியாட்களின் குறுக்கீடுகளால் தனிப்பட்ட பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சில முக்கியமான பயணங்கள் லாபகரமான முடியும். வீடு, கடை, அலுவலகம் போன்றவற்றைப் பழுதுபார்த்து மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களும் உருவாக்குவீர்கள். சகோதரர்களுடனான உறவை எந்த வகையிலும் கெடுக்காமல் கவனமாக இருங்கள்.

மிதுனம்

மிதுன ராசியினர் உங்கள் வேலையை நிம்மதியாகச் செய்தால் வெற்றி கிடைக்கும். மாறிவரும் சூழலின் காரணமாக உருவாக்கப்பட்ட புதிய கொள்கைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். தொழில் திட்டங்களைத் தொடங்க சில முயற்சிகள் எடுக்கலாம். பணியிடத்தில் சிறிய விஷயங்களை கவனத்துடன் செய்து முடிக்கவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்.

கடகம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும்.

சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாளாகும். தன வரவுக்கு வழி உண்டு.

துலாம்

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல நிகழ்வுகள் உண்டு.

விருச்சிகம்

நண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். இருப்பினும் முன்னேற்றமான பல செயல்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

மகரம்

நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

கும்பம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும் நல்ல நாள் ஆகும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *