இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
திங்கள் கிழமையான இன்று முருகருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசிபலன்களுக்கான காண்போம்
நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை 12.9.2022
திதி : இன்று பிற்பகல் 02.13 மணி வரை துவிதியை. பின்பு திரிதியை.
நட்சத்திரம் : இன்று காலை 10.03 மணி வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி.
நாமயோகம் : இன்று பகல் 12.42 மணி வரை கண்டம். பின்பு விருத்தி.
கரணம் : இன்று அதிகாலை 02.43 மணி வரை தைத்துலம் . பின்னர் பகல் 02.13 மணி வரை கரசை. பின்பு வணிசை.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 மணி வரை அமிர்தயோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1
மேஷம்
ஒருசிலர் புதிய வேலைவாய்ப்புகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் நீண்ட நாள் தாமதப்படுத்த பட்ட பல காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் அம்மன் வழிபாடு உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
ரிஷபம்
நண்பர்களுக்கு கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பெரிய அளவில் பண பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி கொண்டீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
மிதுனம்
படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளிநாடுகளில் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். விசா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்வதற்காக சற்று அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன நிம்மதி அடைவீர்கள். உடல்நலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது வரும்.
சிம்மம்
சிலருக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இவைகளில் பேச்சு கிடைக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கன்னி
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் நன்மையும் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.
துலாம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பணம் திரும்பப் பெறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் உண்டு.
விருச்சிகம்
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆதாயம் அடையப் பெற்றேன். போட்டித்தேர்வுகள் வங்கித் தேர்வுகள் போன்றவற்றை சந்திக்க தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.
தனுசு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் வேலை சம்பந்தமான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகளை இன்று உணர்வீர்கள்.
மகரம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாள் ஆகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து முதலீடு செய்வதற்கான சரியான வாய்ப்புகள் ஏற்படும். இவை தொடர்பான சிந்தனைகளும் செயல்களும் வெற்றி தருவதாக இருக்கும். கணவன்-மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும்
கும்பம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நண்பர்கள் வழியில் இருந்து நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பு. தொழில் முயற்சிக்கு பக்கபலமாக உங்கள் நண்பர் வட்டாரம் இருக்கும்.
மீனம்
நண்பர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள் ஆகும். குலதெய்வ வழிபாடு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.