இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 13 ஆம் தேதி பிப்ரவரி 25, 2022, வெள்ளிக்கிழமை
திதி: நவமி பகல் 12.58 மணிவரை அதன் பின் தசமி
நட்சத்திரம்: கேட்டை பகல் 12.07 மணி வரை அதன் பின் மூலம்
யோகம்: வஜ்ரம் நாமயோகம்
கரணம் : கரசை அதன் பின் வணிசை
மரண யோகம் பகல் 12.30 அதன் பின் அமிர்த யோகம்
நேத்திரம் 1, ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் – மேற்கு
சூலம் பரிகாரம் – வெல்லம்
இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நண்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து உங்களை வெளிக்கொண்டுவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் காரிய வெற்றி உண்டாகும் எதிர்பார்த்த பணம் வரும் பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமுகமான முடிவுகளை ஏற்றுவது சற்று காலதாமதம் ஆகும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச்சிறந்த நாடாகவே இருக்கும் நீங்கள் எடுக்கின்ற புது முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய பேச்சு வார்த்தைகளும் நிகழ்வுகளும் மனதிற்கு சந்தோஷம் தருவதாக அமையும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாடாகும் குடும்பத்தில் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கிடைக்கும் திடீர் தனவரவு ஏற்படும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் வாகன வகை சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு உணவு தொழில் சுற்றுலா துறை சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும் கணக்குத்துறை சீருடை பணியாளர்கள் மருத்துவத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டு மனைவி உறவு மேம்படும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும் எதிர்பார்த்த பணம் வரும் கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் சிறந்த நாளாகும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு உத்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாடாக இருக்கும் திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்கள் அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றிக் கொள்வீர்கள் உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பும் அதிகம் வாகன வகை உணவு தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தகவல்களும் வந்து சேரும் கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது தனவரவை அதிகப்படுத்தும் செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும்.