ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். 

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 12 ஆம் தேதி பிப்ரவரி 24, 2022, வியாழக்கிழமை

திதி: அஷ்டமி மாலை 03.04 மணிவரை அதன் பின் நவமி

நட்சத்திரம்: அனுஷம் பகல் 01.30 மணி வரை அதன் பின் கேட்டை

யோகம்: வஜ்ரம் நாமயோகம்

கரணம் : கௌலவம் அதன் பின் பவம் அதன் பின் தைதூலை

சித்த யோகம் பகல் 01.30 அதன் பின் பிரபாலரிஷ்ட யோகம்

நேத்திரம் 1, ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை

பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை

மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை

இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

குளிகை : காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்:
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை கைக்கொள்ளவும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடவேண்டும் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும்.

ரிஷபம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் தன வரவு உண்டாக வாய்ப்பு உண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்கள் கடமையில் இருந்து தவறாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக் கசப்புகளை தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் துணிச்சலாக சில விஷயங்களை எதிர் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய பொலிவுடன் தென்படுவீர்கள். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையாக சிந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. எதையும் உறுதியாக நின்று வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியம் சீராகும்

.விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் வளரும் என்பதால் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை உண்டாகும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காண வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி காணும் வாய்ப்பு உண்டு. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. புதிய தொழில் துவங்குபவர்கள் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *