இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 10 ஆம் தேதி பிப்ரவரி 22, 2022, செவ்வாய்க்கிழமை
திதி: சஷ்டி மாலை 06.35 மணிவரை அதன் பின் சப்தமி
நட்சத்திரம்: சுவாதி பகல் 03.36மணி வரை அதன் பின் விசாகம்
யோகம்: விருத்தம் நாமயோகம்
கரணம் : கரசை அதன் பின் வணிசை
சித்த யோகம் பகல் 03.36 மணி வரை அதன் பின் மரணயோகம்
நேத்திரம் 2, ஜீவன் 0
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை
ராகு, எமகண்டம், குளிகை
ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
இன்றைய ராசிபலன்:
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக இருக்கும். சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுரைகள் கிடைக்கும். வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கும் பல புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி உறவு சீராகும் குடும்பத்தில் ஒற்றுமை நிகழும். சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் சற்று கவனம் தேவை.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகவே இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் தரும். நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய தொழிலில் வெற்றி காண்பார்கள்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயமடைவீர்கள்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். உடல்நலனில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் என்று எதுவும் இல்லை
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது புதிய தொழில் முயற்சிகளை பற்றி சிந்திப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகளை பற்றிய சிந்தனை மனதை ஆட்கொள்ளும். தற்போது பணிபுரியும் இடம் சற்று மன அழுத்தம் மிகுந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே புதிய பணிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. எதிர்பாராத தனவரவையும் சொத்து வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயத்தையும் உணவு தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத்தைத் தரக்கூடிய தினமாக இன்றைய நாள் அமையும். புதிய கடன்கள் கிடைக்கும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தங்களது குடும்பங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும் சுப காரியத்தை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றைய நாள் உள்ளது. திருமண காரியங்கள் வெற்றி பெறும் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாகவே இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட வகையிலும் நல்ல முன்னேற்றங்களை தருவார். எதிர்பார்த்த பணம் வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மேன்மையடையும் நாளாக இன்றைய நாள் அமையும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் புது காரியம் புது முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். அதை சற்று தள்ளி வைக்கலாம் கணவன் மனைவி ஒற்றுமையில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பிற்பகலுக்கு மேல் உத்தியோகத்தில் சற்று அலைச்சல்களைக் கொடுக்கும்.