ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். 

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 08 ஆம் தேதி பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 09.05 மணிவரை அதன் பின் பஞ்சமி

நட்சத்திரம்: ஹஸ்தம் மாலை 04.42மணி வரை அதன் பின் சித்திரை

யோகம்: சூலம் நாமயோகம்

கரணம் : பவம் அதன் பின் பாலவம்

சித்தயோகம்

நேத்திரம் 2, ஜீவன் 1

நல்ல நேரம்:

காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

இன்றைய ராசிபலன்

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் சகோதரர்கள் வகையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் கோபத்தை குறைத்து குணத்தை அதிகமாக கைக்கொள்ளவேண்டும். பொறுமை மிக அவசியம் பல புதிய வியாபாரங்களைப் பற்றி சிந்தனைகளும் நண்பர்களுடன் கலந்துரையாடுவதும் இருக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு கோபத்தை குறைத்து குணத்தை கைக்கொள்ளுங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் காரியங்களுக்காக உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்யவேண்டி வரலாம். இவற்றில் சற்று முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை திறம்பட சமாளிப்பீர்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும் தொழில் முயற்சி செய்பவர்கள் வெற்றி அடைவார்கள் கலைத்துறை ஜவுளித்துறை உணவுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதல் ஆனாலும் அவைகளில் வெற்றி காண்பீர்கள்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும் திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள் புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சுப பலன்களைத் தரும் ஒரு நல்ல நாள் ஆகும் திருமண முயற்சிகளும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்குரிய உகந்த நாள் ஆகும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்த்த தனவரவு உண்டாகும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள். குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். இதனால் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சுபமாகவே முடியும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய சிறந்த நாள் ஆகும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கும் பல புதிய வழிமுறைகளும் புதிய வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளும் கிடைக்கும் பொருளாதாரம் நன்றாக இருந்து வரும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpioநண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள் சகோதரர்கள் வகையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள் உடல் நலம் நன்றாக இருந்து வரும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள் வேலையில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்ர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக இருக்கும். பணம் வரும். சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதம். ஆனாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் வயதானவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களுக்கு இன்றைய நாள் சற்று அலைச்சல் உடன் கூடிய உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாக இருக்கும் எனவே கோபத்தை குறைத்துக் கொள்ளவும் குழந்தைகள் வகையில் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு கல்விச் செலவுகள் சற்று கூடுதலாக ஏற்பட வாய்ப்பு உண்டு. இவைகளைப் பற்றிய சிந்தனைகள் உங்கள் மனதை முழு அளவில் ஆக்கிரமிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *