ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சென்னை: பிலவ வருடம் பங்குனி 4ஆம் தேதி மார்ச் 18, 2022, வெள்ளிக்கிழமை. பவுர்ணமி பகல் 12.47 மணி வரை அதன் பின் பிரதமைத் திதி. உத்திரம் இரவு 12.17 மணி வரை அதன் பின் ஹஸ்தம் நட்சத்திரம். சந்திரன் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கின்றனர். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

இன்று ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார், இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம்

ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

கடகம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும் வீட்டு தேவைகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானம் தேவை.
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சந்திரன் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

18 மார்ச் மாதம் 2022 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை பங்குனி மாசி 4
தேய்பிறை
திதி : இன்று பிற்பகல் 1.48 மணி வரை பெளர்ணமி அதன் பின்னர் பிரதமை திதி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.20 மணி வரை பூரம் நட்சத்திரம் அதன் பின் உத்திரம் நட்சத்திரம்
யோகம் – சித்த யோகம்

சந்திராஷ்டம ராசி : அவிட்டம், சதயம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
ராகு காலம் – காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )

சூலம் :- மேற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *