இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் அதிக காலம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் எளிதில் முடிந்துவிடும் தனவரவு உண்டாக வாய்ப்பு ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். தன வரவு உண்டாக வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள் பெண்களுக்கு இனிமையான நாளாகும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது வழக்கு போன்றவற்றில் வெற்றி அடைவீர்கள்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வீர்கள். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்து விடும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
உங்கள் ராசிக்கு மாலை வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தைக் கைக்கொள்ளவும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்துவிடவேண்டும் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக பொருளாதாரத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உயர் கல்வி நோக்கி சென்று கொண்டு இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வெற்றி அடைவதாக இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
குடும்ப முன்னேற்றம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 28 ஆம் தேதி மார்ச் 12, 2022, சனிக்கிழமை
திதி: நவமி காலை 08.08 மணி வரை அதன் பின் தசமி
நட்சத்திரம்: திருவாதிரை மாலை 05.31 மணி வரை அதன் பின் புனர்பூசம்
யோகம்: சௌபாக்கியம் நாமயோகம்
கரணம் : கௌலவம் அதன் பின் தைதூலை
சித்தயோகம் நாள் முழுவதும்
நேத்திரம் 2 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை