ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 25 ஆம் தேதி மார்ச் 9, 2022, புதன்கிழமை

திதி: சப்தமி இரவு 02.57 மணிவரை அதன் பின் அஷ்டமி

நட்சத்திரம்: கிருத்திகை காலை 08.31 மணி வரை அதன் பின் ரோகிணி

யோகம்: விஷ்கம்பம் நாமயோகம்

கரணம் : கரசை அதன் பின் வணிசை

அமிர்தயோகம் காலை 08.31 மணி வரை அதன் பின் சித்தயோகம்

நேத்திரம் 1 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் : வடக்கு
சூலம் பரிகரம் : பால்

இன்றைய ராசிபலன்:

ரிஷபத்தில் சந்திரன், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் எதிர்காலத்திற்கான சேமிப்புகளை திட்டமிடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்று நல்ல பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடும்பங்கள் தங்கள் விருப்பம் நிறைவேறப் பெறுவார்கள். இரண்டாவது திருமணத்தை எதிர்நோக்கியுள்ள நேயர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்களை விற்பது அல்லது ஈடாக கொண்டு கடன் பெறுவது போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நெருக்கமான நண்பர்கள் பிரிந்து சென்றவர்கள் போன்றவர்களுக்கு இடையில் இருந்து வந்த பல பிரச்சினைகளை தீர்த்து விடுவீர்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்களும், அலைச்சல்களும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் இவற்றில் சற்று கவனமாக இருக்கவும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் செய்துகொண்டிருப்பவர்கள் வெற்றி காண்பார்கள்.குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்க வெற்றி கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை தவிர்த்து விடுதல் நலம். நிர்வாகத்தின் அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பேச்சிலும் சிந்தனையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெளியூரில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும் கல்விக்கான செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள் ஆகும். கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள் பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா தொழில் முயற்சிகளும் நல்ல வெற்றியை நோக்கிச் செல்லும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் தொழிலில் உள்ள ரகசியங்கள் கைவரப் பெறுவீர்கள் வயதானவர்களுக்கு உடல்நலம் வர வாய்ப்பு உண்டு என்றாலும் உடல்நலம் சீராக இருக்கும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலையை படிப்பதற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிது தாமதம் ஆகலாம் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆதாயம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *