ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 24 ஆம் தேதி மார்ச் 8, 2022, திங்கட்கிழமை

திதி: சஷ்டி இரவு 12.31 மணிவரை அதன் பின் சப்தமி

நட்சத்திரம்: கிருத்திகை முழுநாள்

யோகம்: வைதிருதி நாமயோகம்

கரணம் : கௌலவம் அதன் பின் தைதூலை

சித்தயோகம் நாள்முழுவதும்

நேத்திரம் 1 ஜீவன் 1/2

சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

ராகு, எமகண்டம், குளிகை

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

இன்றைய ராசிபலன்

ரிஷபத்தில் சந்திரன், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. பல முக்கிய முடிவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்ததொரு நாளாகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்குச் சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக இருக்கவும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள இளையவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் நன்மையும் உண்டாகும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல பல நிகழ்வுகள் உண்டு.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும் சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் அரசு தொடர்பான வேலைகள் எளிதாக முடிவடையும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ள மூத்தவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் ஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *