இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
நாள்: பிலவ வருடம் மாசி 22 ஆம் தேதி மார்ச் 6, 2022, ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தி இரவு 09.12 மணிவரை அதன் பின் பஞ்சமி
நட்சத்திரம்: அசுவினி இரவு 03.51 மணிவரை அதன் பின் பரணி
யோகம்: பிராமியம் நாமயோகம்
கரணம் : வணிசை அதன் பின் பவம்
சித்தயோகம் இரவு 03.51 மணி வரை அதன் பின் பிரபாலரிஷ்ட யோகம்
நேத்திரம் 0 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்
ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், மேஷத்தில் சந்திரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..
மேஷம்:
நேயர்களே நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதால் உறவுகள் சிறக்கும்.
ரிஷபம்:
நேயர்களே எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய பலமும் வலிமையும் அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக நற்பலனை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். அதோடு உங்களுக்கு சாதகமாக சிறப்பாக செயல்படுவார்கள்.
மிதுனம்:
நேயர்களே நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் செயல்களில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக செயல்படவும். பணவிஷயத்தில் சற்று பொறுமையும் கவனமும் தேவை. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஆகும் என்பதால் நிதானித்து செயல்படும்.
கடகம்:
நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக காப்பாற்றுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற் பலன்களை பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.
சிம்மம்:
நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் வளமும் வலிமையும் அதிகமாக இருக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய அமைப்பு உள்ளது. நல்ல நட்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி:
நேயர்களே உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் உண்டாகலாம். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானமாகவும், சிந்தித்து செயல்படுவது அவசியம். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
துலாம்:
நேயர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும் உங்களுக்கு ஏற்பட்டு வந்த தடைகள் எல்லாம் விலகி அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும் இருக்கும். இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் எடுக்கும். முயற்சியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கக்கூடிய நாள். உங்கள் வேலை அல்லது குடும்ப வேலைகள், பொறுப்புகள் அதிகமாக சுமக்க வேண்டிய நாளாக இருக்கும். தடைப்பட்ட, முடிக்கப்படாமல் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய நாள்.
தனுசு
உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குச் சேவை, வேலைகளைச் செய்ய வேண்டிய நேரம் இது. சிலரின் பாசம், அன்பைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். நன்றியும், தன்னலமற்ற சேவையும் செய்வீர்கள். கர்மா குறித்த கண்ணோட்டம் உங்கள் மனதில் வந்து செல்லும்.
மகரம்
உங்கள் உணர்ச்சிகளை அடக்கி பதற்றமில்லாமல் சிந்திக்கவும். எதிர்மறை சிந்தனையை விலக்கி நிதானமாக நடந்து கொள்ளவும். சமீபத்தில் நடந்த விஷயங்களை நினைத்து நீங்கள் கோபப்பட நேரிடும். சிலரின் செயல்களால் பணியிடத்தில் கோபப்பட நேரிடும். ஆனால் கவனமாகவும், அமைதியாகவும் அவற்றைக் கடந்து வாருங்கள்.
கும்பம்
அலைபாயக்கூடிய மனம் உறுதியாக கவனமாக எதையும் செய்ய உந்தும். உங்கள் மனக்கவலை நீங்கி மன நிறைவு கிடைக்கும். உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். எதிர்மறை ஆற்றல், அச்சங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
கடந்த கால நினைவுகள் வந்து உங்களை ஆழமாக அசைக்கக்கூடும். அமைதியற்ற உணர்வு ஏற்படும். குழப்பமடையச் செய்யும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையில் உங்கள் திறமையினால் சிறப்பான வெற்றியைப் பெற்றிட முடியும்.