ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் புதன், குரு, சூரியன், மேஷத்தில் சந்திரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம்
சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிக்கக்கூடிய அற்புத நாள். உங்களின் லட்சியங்கள் நிறைவேறக்கூடிய நாள்.உங்களின் செயல்பாடுகளை சரியாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது. சனி மற்றும் சந்திரனின் அமைப்பால் உங்கள் தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.

ரிஷபம்
உங்களின் நண்பர்கள், உறவினர்கள் வகையில் சில இடர்பாடு ஏற்படலாம். தொழில், வேலையில் உங்களின் எதிரிகளுடன் கவனமாக இருப்பது அவசியம். சர்ச்சைக்குரிய விஷங்களைப் பேசுவதையும், தேவையற்ற வீண் பேச்சு, விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மிதுனம்

சந்திரன் ராசிக்கு 11ல் இருப்பதால் உங்களுக்கு ஊக்கத்தையும், புதிய ஆற்றலையும் தரக்குடிய நம்பிக்கையான நாளாக இருக்கும்.
நட்பு, உறவு வட்டாரத்தின் மூலம் நன்மை பயக்கக்கூடிய சூழல் நிலவும். திருமண உறவில் மகிழ்ச்சி இருக்கும். புதிய உறவுகளை உருவாக்க சிறந்த நேரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறவும், மேன்மை அடைய சாதகமான நாளாக இருக்கும்.

கடகம்
சந்திரனின் அமைப்பு உங்கள் தொழிலில் மேன்மையும், சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதாக அமையும். இன்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் விரைவில் புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். உங்கள் திறமையை மேம்படுத்தவும், வெளிப்படுத்த சாதகமான நாளாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நேர்மறையான சிந்தனையுடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுகவும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. இன்று நீங்கள் சற்று பணிச்சுமையை சந்திக்க வேண்டியிருக்கும்.

கன்னி

உங்கள் அனுகுமுறையை மேம்படுத்திக் கொள்வதும், நேர்மறையான சிந்தனையுடன் இருப்பது அவசியம். பயம், பதற்றத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும்.
நிதிநிலையில் சிறப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதும், அனுசரித்துச் செல்வதும் அவசியம்.

துலாம்
நீங்கள் சரியாக அறிந்துகொள்ளாத விஷயங்களை நம்பி இறங்க வேண்டாம். நம்பிக்கை இல்லாதவற்றில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். உங்களால் முடியும் என்பதற்கு மட்டும் வாக்குறுதிகளை அளிக்கவும்.

விருச்சிகம்
இன்று உங்கள் நாளை திட்டமிட்டு பயன்படுத்துங்கள். தேவையற்ற நேர விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் வேலையை முடிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் வேலையை மற்றவறிடம் ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்கள், மேலதிகாரிகள் உங்கள் வேலையை கண்காணிக்கக்கூடும்.

தனுசு இன்றைய ராசிபலன்
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் பலருக்கு பிரயாணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும் என்பதால் தைரியமாக பயணங்களை மேற் கொள்ளலாம்.

மகரம் இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. ஒரு சிலர் கோவில்களுக்குச் செல்வது ஆன்மீக மகான்களின் தரிசனம் பெரியோர்களின் ஆசீர்வாதம் போன்றவற்றை பெற்றுக் கொள்வார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்

கும்பம் இன்றைய ராசிபலன்
காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோஷமான சந்திப்புகளும் உண்டு. உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் நல்ல நாள் ஆகும்.

மீனம் இன்றைய ராசிபலன்
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். ஒரு சிலர் இடமாற்றத்திற்கான முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இவற்றில் வெற்றியும் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *