இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 18 ஆம் தேதி மார்ச் 2, 2022, புதன்கிழமை
திதி: அமாவாசை இரவு 11.04 மணிவரை அதன் பின் பிரதமை
நட்சத்திரம்: சதயம் இரவு 02.37 மணிவரை அதன் பின் பூரட்டாதி
யோகம்: சிவம் நாமயோகம்
கரணம் : சதுஷ்பாதம் அதன் பின் நாகவம்
சித்தயோகம் இரவு 02.37 மணிவரை அதன்பின் அமிர்தயோகம்
நேத்திரம் 0 ஜீவன் 0
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம் : வடக்கு
சூலம் பரிகரம் : பால்
இன்றைய ராசிபலன்:
ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் புதன், குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம்
உங்களின் நிதி நிலை மேம்படும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். தன வரவில் இருந்த தடைகள் நீங்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். உங்களின் முயற்சிகள் கைகூடக்கூடிய நாள். தொழில், வியாபார நிமித்தமான பயணங்கள் செல்ல வேண்டி வரும். கடன் பிரச்னைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.
ரிஷபம்
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். சிறப்பான வெற்றியைப் பெற காலையிலேயே சரியான திட்டமிடலுடன் செயல்படவும். உங்களின் திறமை வெளிப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
மிதுனம்
சோர்வும், மந்தநிலையும் உணர்வீர்கள். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சு, செயலில் ஈடுபட வேண்டாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
எதிர்பாராத நெருக்கடியான சூழல் உண்டாகும். உங்கள் வேலையில் பணிச்சுமை இருந்தாலும் முன்னேற்றம் இருக்கும். தொழில் கூட்டாளிகளின் ஆதரவால் நன்மையும் முதலீடுகளும் அதிகரிக்கும்.
கடகம்
இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சாதகமற்ற பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. கவனமாக எந்த செயலை செய்வதோடு, எதையும் திட்டமிட்டு செய்வது அவசியம்.
சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் அலைச்சல்கள் ஏற்அட்க்கூடும். வாகன பயன்பாட்டில் மித வேகமும், கவனம் தேவை. உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க முயலவும். பிறரின் விஷயங்களில் தலையிட வேண்டாம். சபைகளில் பேசும் போது பொறுமையும், மரியாதையுடன் பேசவும்.
சிம்மம்
உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குதல் போன்ற பிடித்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளாக இருப்பவர்கள், பெரிய மனிதர்கள் போன்றோரின் அன்பும், அறிமுகமும் கிடைக்கும்.
கன்னி
படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஒருசிலருக்கு வாகன யோகம் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவது மற்றும் பழைய வாகனங்களை மாற்றுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்
காதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை இன்று துவக்கலாம். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மற்றும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு மகிழ்ச்சியும் இருக்கும். சேவை தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்.
விருச்சிகம்
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், விநாயகர் பெருமானை வழிபட விக்கினங்கள் விலகும்.
தனுசு
தனவரவு இருக்கும் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சொந்தத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்தை தன்னுடைய தொழில் மீது திருப்ப வேண்டி வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும் நல்ல பலன் உண்டு.
மகரம்
குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்
கும்பம்
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மற்றும் தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான நாடாக இன்றைய நாள் செல்லும்.
மீனம்
வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். வெளிநாடுகளிலிருந்து பொருளாதாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பரபரப்பான நாளாக இருந்தாலும் தொழிலில் வெற்றி அடைவீர்கள்.