இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
திங்கள் கிழமை நாளான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் மாசி 16 ஆம் தேதி பிப்ரவரி 28, 2022, திங்கட்கிழமை
திதி: திரயோதசி இரவு 03.16 மணிவரை அதன் பின் சதுர்த்தசி
நட்சத்திரம்: உத்திராடம் காலை 07.02 மணி வரை
அதன் பின் திருவோணம் மறுநாள் விடிகாலை 05.19 மணிவரை
யோகம்: வரீயான் நாமயோகம்
கரணம் : கரசை அதன் பின் வணிசை
மரணயோகம் காலை 07.02 மணி வரை அதன் பின் அமிர்தயோகம் அதன் பின் சித்தயோகம்
நேத்திரம் 0 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

இன்றைய ராசிபலன்:
ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நிதானத்துடன் செயல்படுவது நல்லது எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் சற்று தடைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடியை உண்டாகலாம் தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களைச் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
எதிலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாளாக இன்று நாள் உள்ளது. தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
பல்வேறு வகையில் அனுகூலங்கள் கிடைக்கக் கூடிய நாடாக இருக்கும். இன்று மாலை உங்களுக்கு சந்திராஷ்டமம் துவங்க உள்ளது. அதனால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நேயர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உங்களுக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி நன்மை ஏற்படும். பொருளாதாரம் உயரும் என்பதால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி ஆகக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவைத் தக்க சமயத்தில் கிடைக்கும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
மக்களுக்கு பல்வேறு வகையில் வளமான பலன் ஏற்படக் கூடிய நாடாகும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும் தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
உங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து நிம்மதி ஏற்படும் பண வரவுகள் தாராளமாக கிடைக்கும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கடந்தகால சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
உங்களுடைய வளமும் வலிமையும் கூட கூடிய நாளாக இன்று நாள் இருக்கும் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழில் ரீதியாக புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒரு வளமான பலன்களை அடைவீர்கள்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகலாம். பணவரவில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது தொழில் ரீதியாகப் பார்க்கும். போது முடிந்தவரைச் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களே எல்லா வகையிலும் ஏற்றம் அடையக்கூடிய நாளாக இன்று இருக்கும். எதிர்பார்த்த பண உதவி தக்க சமயத்தில் கிடைக்கும் உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் கூடிய அதிர்ஷ்ட நாளாக கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களே இன்று எதிலும் சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள் ஆகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களின் அமைதியைக் கொடுப்பார்கள் தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களை அனுசரித்துச் செல்லக்கூடியதாக இருக்கும். கூட்டாளிகளைச் சற்று அனுசரித்துச் செல்வதால் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபகரமான பலன் இன்று இன்று கிடைக்கும். தொழில் இலாபகரமான பலனை அடைவீர்கள்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய வேலைகளுக்கு கூட சற்று கால தாமதம் ஆகலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம் தொழிலில் இருப்பவர்கள் வேலையாட்களைச் சற்று அனுசரித்துச் செல்லவும்.