ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 06ஆம் தேதி பிப்ரவரி 18, 2022, வெள்ளிக்கிழமை

திதி: துவிதியை இரவு 10.29 மணிவரை அதன் பின் திருதியை

நட்சத்திரம்: பூரம் மாலை 04.42 மணி வரை அதன் பின் உத்திரம்

யோகம்: சுகம் நாமயோகம்

கரணம் : தைதூலை அதன் பின் கரசை

சித்தயோகம்

நேத்திரம் 2, ஜீவன் 1

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் – மேற்கு

சூலம் பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் சற்று கவனம் தேவை புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் வெற்றி அடைவர்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையே வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாளில் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியடையும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாளின் முற்பகுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள் தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *