சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் – மே 18, 2022 புதன்கிழமை.

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 4ஆம் தேதி புதன்கிழமை 18.5.2022

திதி : இன்று அதிகாலை 03.35 மணி வரை துவிதியை திதி. பின்னர் திரிதியை

நட்சத்திரம் : இன்று பகல் 11.03 மணி வரை கேட்டை . பின்னர் மூலம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 01.05 மணி வரை சிவம். பின்னர் சித்தம்.

கரணம் : இன்று காலை 03.35 மணி வரை கரசை. பின்னர் மாலை 04.20 மணி வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதி யோகம்: இன்று காலை 11.03 மணி வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்;

மேஷ ராசிக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். உங்கள் திறமையால் மக்களை கவர்வீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்தால், கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சமூகப் பணிகளில் பங்கேற்று மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும், இது உங்கள் சமூக வட்டத்தை அதிகரிக்கும்

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அமைதி காக்கவும். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் சாதகமாக அமையும்

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini

புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் –

எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo

கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு. பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo

வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு

துலாம் இன்றைய ராசிபலன் – Libra

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio

நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius

சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும். உடல்நலன் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி மேம்படும். உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius

குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது. மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces

சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது மிக நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *