இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
செவ்வாய் கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 3ஆம் தேதி செவ்வாய்கிழமை 17.5.2022
திதி : இன்று காலை 08.07 மணிவரை பிரதமை திதி. பின்னர் துவிதியை.
நட்சத்திரம் : இன்று பகல் 12.37 மணி வரை அனுசம் . பின்னர் கேட்டை.
நாமயோகம் : இன்று அதிகாலை 04.00 மணி வரை பரிகம் . பின்னர் சிவம்.
கரணம் : இன்று காலை 08.07 மணி வரை கௌலவம். பின்னர் மாலை 05.51 மணி வரை தைத்துலம். பிறகு கரசை .
அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1
இன்றைய ராசிபலன்:
Aries மேஷம் இன்றைய ராசிபலன்
மேஷ ராசிக்கு உங்களின் தகுதிக்கேற்ப பல்வேறு சலுகைகள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான விஷயங்கள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு செல்வதற்கான உங்கள் முயற்சிகள் சாதகமாக நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு பல்வேறு வகையில் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்
ரிஷபம் ராசிக்கு தொழில், வியாபாரம் சார்ந்த திட்டங்கள் தொடங்க நல்ல நாளாக இருக்கும். மேற்படிப்பு, வெளிநாடு, வெளியூர் செல்வதற்கான விஷயங்கள் சாதகமாக அமையும். பூர்விக சொத்துக்கள் சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். பெரிய தொழில் முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பனியாற்ற்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்
Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நாள் ஆகும். திருமணம் போன்ற சுப காரிய வாய்ப்புகள் கைகூடி வரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
Cancer கடகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.
Leo சிம்மம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்
Virgo கன்னி இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
Libra துலாம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.
Scorpio விருச்சிகம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
Sagittarius தனுசு இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.
Capricorn மகரம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியை முடித்து நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் சிறப்பானதொரு நாளாகவே அமையும். கணவன் மனைவி உறவு மேம்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாகத் தெரியும். உடல் நலம் சீராக இருந்துவரும்.
Pisces மீனம் இன்றைய ராசிபலன்
மீன ராசிக்கு செல்வாக்கு அதிகரிப்பதற்கான சாதகமான நாள். இருப்பினும் உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளில் இருந்து விலகி இருந்தால் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் எதிரிகளை சிறப்பாக கையாண்டு சாதகமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் திட்டங்களையும் ரகசியங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.