இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
திங்கள்கிழமையான இன்று முருகருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்
நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 03.10.2022
திதி : இன்று மாலை 04.15 மணி வரை அஷ்டமி. பின்னர் நவமி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.23 மணி வரை மூலம். பின்னர் பூராடம்.
நாமயோகம் : இன்று மாலை 03.28 மணி வரை சோபனம். பின்பு அதிகண்டம்.
கரணம் : இன்று அதிகாலை 05.26மணி வரை பத்தரை . பின்னர் மாலை 04.15 மணி வரை பவம். பின்பு பாலவம்.
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 02.23 மணி வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2
இன்றைய ராசிபலன்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மனநிறைவு ஏற்படக்கூடிய நாள். மற்றவர்களை சந்தேகிப்பது உறவில் விரிசல் ஏற்படக்கூடும். எனவே உங்கள் சிந்தனையில் தெளிவாக இருப்பது முக்கியம். குழந்தைகளின் எந்த பிரச்சனையிலும் கலங்காமல், பெற்றோர்கள் உதவுங்கள்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிற்பகலில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். எனவே நாளின் தொடக்கத்தில், உங்கள் பணிகளை சரியான திட்டமிடலுடன் தொடங்குங்கள். குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிறந்த ஆளுமை மற்றும் எளிமையான குணத்தால் சமூகத்தில் நல்ல புகழை தக்க வைத்துக் கொள்வார்கள். சமூகப் பணிகளிலும் சிறப்பான பங்களிப்பைப் பெறுவீர்கள். குடும்ப தகராறுகள் அல்லது கருத்து வேறுபாடுகளை சமாளிக்க இதுவே சரியான நேரம்.
கடகம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள் அவர்கள் வெற்றி அடைவர்.
சிம்மம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் நிம்மதியான நாடாக என்று இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் மனதில் எழும்.
கன்னி
சுபகாரிய முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்தி கொள்ளவும். உலகம் நமக்காக மட்டுமே சுற்றவில்லை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை மனதில் நிறுத்தவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்
குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். கல்வி செலவினங்கள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வர். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவு செய்ய கிடைக்கும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.
விருச்சிகம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாடாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையே வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
தனுசு
நண்பர்களுக்கு இனிய நாள் ஆகும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும்.நண்பர்களுக்கு இனிய நாள் ஆகும்.
மகரம்
நண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும். இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.
கும்பம்
புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும் நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும்
மீனம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். என்ஜினீயரிங் தொடர்பான கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை உங்கள் கண்முன் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.