சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 2ஆம் தேதி திங்கள்கிழமை 16.5.2022

திதி : இன்று காலை 10.20 மணிவரை பௌர்ணமி திதி. பின்னர் பிரதமை.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.03 மணி வரை விசாகம் . பின்னர் அனுசம்.

நாமயோகம் : இன்று காலை 06.36 மணி வரை வரீயான் . பின்னர் பரிகம்.

கரணம் : இன்று காலை 10.20 மணி வரை பவம். பின்னர் இரவு 09.44 மணி வரை பாலவம். பிறகு கௌலவம்

அமிர்தாதி யோகம்: இன்று பகல் 02.03 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

Aries மேஷம் இன்றைய ராசிபலன்

நேயர்களே தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் மனக் குழப்பங்கள் ஏற்படும் இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் பொறுமையுடன் இருப்பது மிக மிக அவசியம். தொழிலில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்களுக்கு ஒரு வளமான பலன்களை அடையலாம்.

Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்

நேயர்களே எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வரவுகள் சாதகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பொதுவாக நிதானத்துடன் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மிக பொறுமை காப்பது அவசியம்.

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுடைய வளமும் வலிமையும் அருகே இருக்கக்கூடிய இனிமையான நாளாக இன்று இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் லாபகரமான பலன்களை பெறலாம்.

Cancer கடகம் இன்றைய ராசிபலன்

நேயர்களே எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை நீங்கள் அடைவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும்.கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். அவர்களுடன் பேசும்போது சற்று பொறுமையுடன் இருப்பது அவசியம்.

Leo சிம்மம் இன்றைய ராசிபலன்

நேயர்களே எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். ஒரு பெரிய இடத்து நட்பு உங்களை தேடி வரும் புதிய பொருட்கள் வாங்க கூடிய யோகம் இருக்கிறது குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்கள் பெறுவீர்கள்.

Virgo கன்னி இன்றைய ராசிபலன்

நேயர்களே நீங்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் ஒரு சாதகமான பலன்களை அடையலாம். பேச்சில் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சாதகமாக இருக்கும் உங்களுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இருக்கும். இருந்தாலும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் சற்று பொறுமையுடன் சிந்தித்து செயல்படுங்கள்.

Libra துலாம் இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிப்பதற்குக் கூட சற்று இடையூறு உண்டாகும். பணவரவுகள் சாதகமாக இருக்கும் நிலையில் உள்ளது. தொழில் வியாபாரத்தில் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் லாபகரமான பலனை அடையலாம்.

Scorpio விருச்சிகம் இன்றைய ராசிபலன்

நேயர்களே பணவரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அற்புத நாளாக இருக்கும். தொழில் ரீதியாக நெருக்கடிகள் சற்று குறையக் கூடிய நல்லா இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்கும் ஒரு பெரிய இடத்து நட்பானது உங்களுக்கு கிடைக்கும்.

Sagittarius தனுசு இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுடைய செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு மிக மிக சிறப்பாக இருக்கும் தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் நல்ல பெயர் எடுக்க முடியும். உங்கள் மீது இருந்த பற்கள் எல்லாம் நீங்கும்.

Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்

நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கக்கூடிய இடத்தில் இந்த தான் மதிப்பு மரியாதை கிடைக்கும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் இன்று குறைய குறைய வாய்ப்புகள் உள்ளது அவர்கள் வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் எல்லாம் கைகூடும்.

Capricorn மகரம் இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுடைய வளமும் வலிமையும் கூடக்கூடிய நாளாக இருக்கும்.பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் சிறப்பாக காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் சமாளிப்பதற்கு விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் உடன் இருப்பவர்கள் உடன் பேசும் போது சற்று நிதானத்துடன் பேசுவது அவசியம்.

Pisces மீனம் இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுக்கு பொருளாதார ரீதியான சாதகமான பலன் ஏற்படும். தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் ஒரே கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் ரீதியாக ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *