இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
நாள் : சுபகிருது வருடம் ஆடி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 04.8.2022
திதி : இன்று அதிகாலை 02.46 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
நட்சத்திரம் : இன்று மாலை 04.21 மணி வரை சித்திரை. பின்னர் சுவாதி.
நாமயோகம் : இன்று பகல் 02:34 மணிவரை சாத்தியம். பின்பு சுபம் .
கரணம் : இன்று அதிகாலை 02:46 மணி வரை தைத்துலம். பின்னர் பகல் 02.10 மணி வரை கரசை. பின்பு வணிசை.
அமிர்தாதியோகம்: இன்று மாலை 04.21 மணி வரை சித்தயோகம். பின்னர் வரை மரணயோகம்.
நல்ல நேரம்
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை
இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2
இன்றைய ராசிபலன்
மேஷம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல உறவுகள் நெருங்கி வருவதற்கான நல்ல நாள்.
ரிஷபம்
நேயர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிறப்பான ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் சிலருக்கு பிரயாணம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு இவைகளால் ஆதாயமும் உண்டு.
கடகம்
குடும்பத்தில் அமைதி தவழும் வீட்டில் உள்ள மூத்தவர்கள் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் ஆகும்.
சிம்மம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும் தொழில் துறையிலும் தேவையான அளவில் உதவி செய்வார்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும் .
கன்னி
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் மன நிம்மதி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.
துலாம்
அன்பர்களுக்கு நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் தென்படும்.
விருச்சிகம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் ஆகும். விருந்தினர் அல்லது உறவினர் வருகை உண்டு. இவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் இவர்கள் வெற்றி அடைவார்கள்.
தனுசு
ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கும் மேல்நிலைக்கல்வியில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இவைகள் உங்கள் கை வந்து சேர வாய்ப்புகள் உண்டு.
மகரம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
கும்பம்
நண்பர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாள் ஆகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.
மீனம்
ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும் என்பதால் உணவுப் பொருட்களில் சற்று கவனமாக இருக்கவும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு.