ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆடி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.7.2022

திதி : இன்று முழுவதும் பிரதமை.

நட்சத்திரம் : இன்று காலை 10.49 மணி வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

நாமயோகம் : இன்று மாலை 07:07 மணிவரை சித்தி. பின்பு வியதீபாதம் .

கரணம் : இன்று பிற்பகல் 12.45மணி வரை கிமிஸ்துக்கினம். பின்பு பவம்

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை அமிர்தயோகம். பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 0

இன்றைய ராசிபலன்:

மேஷம்

கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைமையை அடைவார்கள். அசையா சொத்துக்களாலும் நிலம் பூமி போன்றவற்றை விற்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்பனை ஆவதற்கான வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை மாணவர்களுக்கு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு அவற்றை சிந்திக்கக் கூடிய நாளாக இருக்கும். நிர்வாகத்திடம் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். முன்னேற்றமான பல நிகழ்வுகள் வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை அன்பு உடையதாக இருக்கும்.

கடகம்

நண்பர்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்கும். பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நாள் என்பதால் நிதி உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை அவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். இவற்றிற்காக கடன்பட நேரலாம். இருப்பினும் வெற்றி நிச்சயம்.

சிம்மம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். என்றாலும் சிறுசிறு பிரச்சினைகளும் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். குறிப்பாக தொழில் கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்கள் மருத்துவ கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும் எதிர்காலத்திற்கான முதலீடுகள் செய்வது பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அந்நியோன்யம் நன்றாக இருக்கும்.

துலாம்

பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாடாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள். முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பான எண்ணங்களும் செயல்பாடுகளும் தோன்றும். இடங்களில் வெற்றி காண்பீர்கள்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும் என்பதால் சற்று பொறுமையை கையாள்வது நல்லது. இருப்பினும் இவற்றை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்.

மகரம்

நண்பர்களுக்கு உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். அதற்காக கடன்பட வேண்டியது நேரலாம் இருப்பினும் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *