இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை 9.7.2022
திதி : இன்று பகல் 12.10 மணி வரை தசமி. பின்னர் ஏகாதசி .
நட்சத்திரம் : இன்று காலை 07.33 மணி வரை சுவாதி. பின்னர் விசாகம் .
நாமயோகம் : இன்று அதிகாலை 03.21 மணி வரை சித்தம் . பின்பு சாத்தியம்.
கரணம் : இன்று பின்னிரவு 12.59 மணி வரை தைத்தூலம். பின்னர் பகல் 12.10 மணி வரை கரசை. பின்பு பத்தரை .
05.57 மணி வரை சித்தயோகம். காலை 07.33 மணி வரை அமிர்தயோகம்.பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1/2
இன்றைய ராசிபலன்:
மேஷம்:
அலுவலக வாழ்க்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு இப்போது வெற்றி கிடைக்கும். உங்கள் குழுவில் சேரும் மூத்த பணியாளர் ஒருவர் மூலமாக மிக தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்
ரிஷபம்
உங்கள் அன்றாட பணிகளை சுமூகமாக முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். எதிர்பாராத செய்தி ஒன்று உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற புதிய விளையாட்டு போட்டி உங்களை ஈர்க்கும்.
மிதுனம்:
உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களோடு வாக்குவாதம் செய்யத் தொடங்கினால் நீங்கள் சற்று அமைதி காக்க வேண்டும். நீண்ட விவாதங்களை காட்டிலும் எளிய விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். நண்பர்களை கவனமாக தேர்வு செய்வீர்கள்.
கடகம்
சில விஷயங்களை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் தீர இருக்கிறது. அந்த காரியத்தை எடுத்துச் செய்து முடிக்க இருக்கிறீர்கள். எண்ணத்தில் தெளிவு தேவை. சமூக அந்தஸ்து குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலும் நீங்கள் புத்துணர்ச்சியாக, முழு ஆற்றலை உணருவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நேர்மறையான செய்தி வந்து சேருவதால் இந்த நிலை ஏற்படும். பணியிடத்தில் போட்டி நிலவும்.
கன்னி:
அன்றாட பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் நீங்கள் வெறுப்பு அடைவதால், அவற்றில் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும். சிலரிடம் உதவி கேட்பது கூட நல்ல யோசனைதான். தகவல் தொடர்பில் கவனம் தேவை.
துலாம்:
உங்களுக்காக நீங்களே இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி ஒன்றை இப்போது நிறைவேற்றும் தருணம் வந்திருக்கிறது. உங்கள் உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் நிலவக் கூடும்.
விருச்சிகம்:
உங்களின் தற்போதைய கனவு அல்லது இலக்கு நோக்கி விண்ணப்பிக்க வேண்டிய அதிர்ஷ்டகரமான நாள் இது. தகவல்களை அதிக மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தேவையற்ற சச்சரவுகள் உருவாகலாம்.
தனுசு:
உங்களை சுற்றியுள்ள சிலர் உங்களிடம் எதிர்மறையான எண்ணங்களை விதைக்க முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாது. பிரச்சனையை தீர்க்க புதிய உத்திகள் உதவிகரமாக இருக்கும்.
மகரம்:
அவசரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போதுமானதாக இருக்காது. கடைசி நேர கவலைகள் சச்சரவுகளை உருவாக்கும். ஒரு சமயத்தில் ஒரு விஷயம் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். தியானம் கை கொடுக்கும்.
கும்பம்:
பழைய கனவு ஒன்று உங்களை நாள் முழுவதும் தொந்தரவு செய்து கொண்ட்டே இருக்கும். புதிய திசையை நோக்கி சின்னஞ்சிறு முயற்சிகளை மேற்கொள்வது பலன் தரும். நண்பர் மூலமாக புதிய தகவல் அல்லது வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மீனம்:
வாழ்வில் சமநிலை பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நாளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். எதிர்வரும் விவாதம் குறித்து பதபதைப்பு இருந்தால், கவலையை விடுங்கள். அது சாதகமாகவே இருக்கும்.