சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை 14.5.2022

திதி : இன்று பகல் 01.54 மணிவரை திரியோதசி திதி. பின்னர் சதுர்த்தசி .

நட்சத்திரம் : இன்று மாலை 04.10 மணி வரை சித்திரை . பின்னர் சுவாதி.

நாமயோகம் : இன்று காலை 11.37 மணி வரை சித்தி . பின்னர் வியாதீபாதம்.

கரணம் : இன்று அதிகாலை 02.31மணி வரை கௌலவம். பின்னர் பகல் 01.54 மணி வரை தைத்துலம். பிறகு கரசை .

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.53 மணி வரை சித்தயோகம்.பின்னர் மாலை 04.10மணி வரை மரணயோகம். பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்;

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
உங்கள் செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் யோகம் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும், மற்றவர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால், எதையும் தைரியமாக எதிர் கொள்வீர்கள்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
உங்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும். இருக்கும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் சாதகமான பலன்கள் அடைவீர்கள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களைத் தீட்டி மேன்மையான பலன்களை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய முயற்சி வெற்றியடைந்து வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். இவை தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நாளில் முற்பகுதியில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவற்றில் வெற்றியும் கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும். கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
பேச்சிலும், செயலிலும் கவனமாக செயல்பட்டால் ஒரு வளமான பலனை அடையலாம். உங்களின் செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருந்தாலும், வரவுக்கு மீறிய செலவு இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
உங்களுக்கு மேன்மையான பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால், கடன் பிரச்னைகள் நீங்கி அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். எந்த பிர்சனையும் நேர்மையாக எதிர்கொண்டு நல்ல பலன் அடைவீர்கள். அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடையும் அதிர்ஷ்டம் இருக்கிறது. குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். தொழிலில் ஒரு வளமான பலன் ஏற்படும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப்புழக்கம் மிக மிக சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் அனுகூல பலன் ஏற்படும். தொழில் ரீதியாக லாபம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *