ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தொழிலுக்குத் தேவையான சரக்குகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். தள்ளிப்போய் கொண்டிருந்த வேலையைச் சிரமத்துடன் முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் குடும்பத்திற்குத் தேவையானதை செய்து முடிப்பீர்கள். அரசியலில் நல்ல பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை அடைவீர்கள்.

ரிஷபம்

தொழில் வியாபாரங்களுக்கு இடையூறாக இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தோன்றி மன நிம்மதி கெடும். நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டும் என்று வயசுப் பிள்ளைகளை கட்டாயப் படுத்துங்கள். அரசாங்க ஊழியர்கள் சட்டதிட்டங்களை மீறாதீர்கள். கையூட்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். பைனான்ஸ் தொழிலை பதமாக நடத்துங்கள்.

மிதுனம்

தொழில் வளர்ச்சி அபாரமாக காணப்படும். புதிய முதலீடுகளில் மூலம் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வங்கியிலிருந்தும் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மூலம் சாதகமான பலனைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுங்கள்.

கடகம்

கூட இருந்தவரே உங்களுக்குப் போட்டியாக தொழில் தொடங்குவார். உறவினர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். கல்வியில் முன்னேற்றம் அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகமாகும். அவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். காரிய வெற்றியும் பெறுவீர்கள்.

சிம்மம்

மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக இடம் வாங்குவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் மனநிம்மதியுடன் வேலை பார்ப்பார்கள். கடை வியாபாரிகள் கணிசமாக லாபம் அடைவார்கள். மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள்.

கன்னி

வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். உங்களுக்கு விருப்பமில்லாத புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகம் சாதகமாக இருக்காது. போட்டி பந்தயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம்.

துலாம்

நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். தொழில் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் காரியத் தடைகள் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தது பெருமை சேர்ப்பார்கள்.

விருச்சிகம்

வியூக வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தொழில் துறைகளில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவர்.அர்ப்பணிப்புடன் வேலை பார்த்து மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். தனியார் ஊழியர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பணிபுரிந்து பாராட்டப்படுவார்கள்.

தனுசு


புதிய வீடு வாங்குவதற்கு அனுகூலமாக பணம் கைக்கு வந்து சேரும். பெண்கள் நினைத்த காரியத்தை முடிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் மிகுந்த முன்னேற்றம் காணும். வியாபாரம் தொடர்பாக புதிய இடம் வாங்குவீர்கள். குடும்ப வருமானம் அதிகரித்து வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வேகம் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளை உறவினர்கள் உதவியுடன் சுமூகமாக முடிப்பீர்கள். நண்பர்களின் அரவணைப்பு அதிகமாக இருக்கும். பெண்கள் கோபத்தைக் கைவிட வேண்டும்.

கும்பம்

கொடுத்த கடனைக் கேட்பதில் சிக்கல் உண்டாகும். தொழிலுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்க தாமதமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். பணியிடத்தில் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாடுபடவேண்டும். தேவையில்லாமல் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்

மீனம்

கல்லுக்குள் ஈரம். சொல்லுக்குள் வீரம். இதுதான் உங்கள் நிலை. உறுதியாக நின்று நண்பரின் கஷ்டத்தைப் போக்கு வீர்கள். சகோதரியின் பிரச்சனையைத் தீர்த்து கணவரோடு சேர்த்து வைப்பீர்கள். வழியில்லாத ஏழை மாணவரின் படிப்புக்குச் செலவு செய்வீர்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 26ஆம் தேதி வியாழக்கிழமை 9.6.2022

திதி : இன்று அதிகாலை 04.05 மணி வரை நவமி. பின்னர் தசமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.44 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

நாமயோகம் : இன்று இரவு 10.15 மணி வரை வியதீபாதம். பின்னர் வரீயான் .

கரணம் : இன்று அதிகாலை 04.05 மணி வரை கௌலவம். பின்னர் மாலை 03.41 மணி வரை தைத்துலம். பிறகு கரசை.

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை12.44 மணி வரை அமிர்தயோகம். பின்னர் அடுத்த நாள் அதிகாலை 05.51 மணி வரை மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 11.00 முதல் 12.00 மணி வரை

பகல்: 12.00 முதல் 01.00 மணி வரை

இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *