ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய் கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இன்று அதிர்ஷ்டம் உங்களின் பக்கம் இருக்கும், நீங்கள் சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். உங்கள் பேச்சு இனிமையாக இருக்கும், இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல பண ஆதாயமும், செல்வாக்கும் புகழும் கூடும். வியாபாரிகளுக்கு லாப நிலை இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்க வேண்டும். நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக உணருவீர்கள். வியாபாரத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட்டால், சிரமங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். இளைஞர்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அரசியல் விவகாரங்கள் சாதகமான சூழல் இருக்கும். குடும்ப மகிழ்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

மிதுனம்

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்களின் பேச்சில் கனிவு இருக்கும். அது உங்களை எந்தத் துறையிலும் வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரித்து, அதில் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வியாழக்

கடகம்

கடக ராசிக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இன்று இருக்கும். கடின உழைப்பால் எந்த பிரச்னைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். சொத்து, ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். செலவு விஷயங்களில் கவனம் தேவை. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் செலவிடுங்கள். கையில் எடுக்கும் எந்தப் பணியும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த சாதகமான நாள். வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். உங்கள் நண்பரை சந்தித்து, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள், இதன் காரணமாக உங்கள் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்கும். உங்களின் மனச் சோர்வு நீங்கும், எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்

​கன்னி:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனமும், வேகமான செயல்பாடும், பணியில் ஈடுபாடும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். சிறிய முதலீடுகள் உங்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கூட்டுத் தொழிலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

துலாம்

இன்று உங்கள் ஆசைகளை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். நிர்வாகம் தொடர்பான பணிகள் சீராக நடைபெறும். தற்போதுள்ள உங்களின் சூழ்நிலை வணிக நடவடிக்கைகளுக்கு சாதகமற்றதாக, பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்களின் நற்பெயரும், கௌரவமும் உயரும். இன்று உங்கள் பழைய நண்பருடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இன்று மனம் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள். குடும்பத்துடன் மனம் விட்டு பேசி நேரம் செலவழிப்பீர்கள், பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் மனம் படிப்பில் ஈடுபடாது. வேலை தேடுபவர்களுக்கு அலுவலகத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வேலைகளை முடிக்க கடினமாக முயற்சிக்க வேண்டியது இருக்கும். வணிக நடவடிக்கைகள் நற்பலன் தர காலதாமதம் ஆகலாம். வழக்கு சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைகள் உங்கள் விருப்பப்படி அமையும். உங்களின் வியாபாரத்தில் முடங்கிக் கிடக்கின்றன சில வேலைகள் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்கு சாதகமான பலன் தரும்.

கும்பம்

உங்கள் வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இன்று புதிய கொள்முதல் செய்வீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட முயல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களை சந்தித்து நலம் விசாரிப்பீர்கள்.

மீனம்

இன்றைய நாள் சிறப்பாக தொடங்கும். இன்று வேலை அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பணம் கிடைக்கும். இன்று உங்கள் நிதி நிலை அதிகரிக்கும். இன்று, வணிகம் தொடர்பான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வேலையில் முன்னேற்றம் தரக்கூடிய பெரிய மாற்றம் ஏற்படலாம்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.6.2022

திதி : இன்று அதிகாலை 04.15 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

நட்சத்திரம் : இன்று முழுவதும் பூரம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 01.33 மணி வரை ஹர்ஷணம் . பின்னர் வஜ்ரம்.

கரணம் : இன்று காலை 04.15 மணி வரை வணிசை. பின்னர் மாலை 04.20 மணி வரை பத்தரை. பிறகு பவம்.

அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *