ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமை 6.6.2022

திதி : இன்று அதிகாலை 03.32 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

நட்சத்திரம் : இன்று இரவு 11.18 மணி வரை மகம். பின்னர் பூரம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 01.52 மணி வரை வியாகாதம் . பின்னர் ஹர்ஷணம்.

கரணம் : இன்று காலை 03.32 மணி வரை தைத்துலம் . பின்னர் பிற்பகல் 03.55 மணி வரை கரசை. பிறகு வணிசை.

அமிர்தாதி யோகம்: இன்று இரவு 11.18 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 09.00 முதல் 10.00 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பெண்களுக்கு ஏதாவது ஒரு மனக்கவலை பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டுப் படிக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது சில பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்

விவசாயத் தொழிலில் விறுவிறுப்பாக ஈடுபடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப்புடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் மறையும். எதிர்பார்த்த இடங்களில் தடையில்லாமல் வேலை நடக்கும். பங்குதாரர்களிடம் இருந்த பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பீர்கள்.

மிதுனம்

குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். வாக்கு வன்மையால் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூரில் தங்க நேரிடும். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள். வெளிநாட்டிலிருந்து உதவி கிடைக்கும்.

கடகம்

போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பொறியியல் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார்கள். கமிஷன் வியாபாரம் கணிசமான லாபத்தைத் தரும். புதிய தொழிலுக்குத் தேவையான அரசு அனுமதி கிடைக்கும். ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். பொதுக் காரியங்களின் மூலம் வெளிவட்டாரத்தில் உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

சிம்மம்

எடுத்த காரியம் முடிவுக்கு வராமல் இழுபறி நிலை உருவாகும். வீட்டில் பெண்கள் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவார்கள். பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்க்க வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். பணியிடங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகும். உழைப்புக்குத் தகுந்த மரியாதை கிடைக்காது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான போக்கு காணப்படும்.

கன்னி

என்னதான் கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முடியாது. தொழிலில் உற்பத்தி முடக்கம் ஏற்படும். வேலை இடங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். வழக்கு சம்பந்தமாக காவல் நிலையம் செல்ல நேரிடலாம்.

துலாம்

ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமான லாபத்தைத் தரும். தொழிலில் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பங்குச் சந்தை வியாபாரம் நல்ல முன்னேற்றம் காணும். வேலையிடத்தில் உரிய மரியாதை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கடன் பாக்கிகள் தடையின்றி வசூலாகும்.

விருச்சிகம்

உறவினர்களின் ஒத்துழைப்பு நல்லமுறையில் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேகமாக வளர்ச்சி காண்பீர்கள். போட்டி பந்தயங்கள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான வளர்ச்சி காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மரியாதை உண்டு.

தனுசு

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கும். நிலப்பட்டா மாறுதல்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். பெண்களுக்குத் தேவையான நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆசையை சிரமப்பட்டு பூர்த்தி செய்வீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்து தொழிலை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்

கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டாதீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வையுங்கள். வெளியூர்ப் பயணங்கள் தேவையில்லாத அலைச்சலை உண்டாக்கும். உங்களின் வேலைக்கு உடனிருப்பவர்களே வேட்டு வைக்க நினைப்பார்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.

கும்பம்

தாய்மாமன் வகையில் இருந்த விரிசலை சரி செய்வீர்கள். தடைப்பட்டு நின்ற திருமணப் பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சனை உங்களுக்குச் சாதகமாக முடியும். மனைவி மக்கள் மிகுந்த அனுசரணையாக நடந்து கொள்வார்கள். திடீரென்று வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மீனம்

ஆடல் பாடல் போன்ற பொழுது போக்கு அம்சங்களில் மனம் நாட்டம் கொள்ளும். வியாபார எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வீட்டிற்கு வாங்குவீர்கள். வாகனத் தவணையைக் கட்டி முடிப்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அனுகூலமான பலனைப் பெறுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். கடன் சுமை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *