இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஞாயிறு கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
மேஷம்
ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் மாறிய உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும்.
ரிஷபம்
அலுவலகத்தில் நீங்கள் பட்ட சிரமங்கள் ஒரு முடிவுக்கு வரும். சங்கடப்பட்ட மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் குடியேறும். பலகாலம் தடைபட்ட இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும். இல்லத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த விரிசல் விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலை விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் முழுக் கவனம் தேவை.
மிதுனம்
மேல் அதிகாரிகளின் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு. உங்கள் திறமையைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி லாபத்தைப் பெருக்குவீர்கள். சினமூட்ட நினைத்தவர்களிடமிருந்து சிரிப்புடன் விலகுங்கள். நில விற்பனைத் தொழில் சூடுபிடிக்கும். மணல், செங்கல் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும்.
கடகம்
தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கடிதம் கொடுக்காதீர்கள். தவறான வழிகாட்டுதலுக்கு அவசரப்பட்டு தலையாட்டி விடக்கூடாது. அதனால் பொருள் இழப்பு ஏற்படும். குடும்பத்தில் பொறுப்பும் பொறுமையும் மிக முக்கியம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுங்கள். அவசியத்தேவைக்கு கடன் வாங்க நேரிடும்.
சிம்மம்
சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்கள் கூடி வரும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். போட்டி பந்தயங்களில் ஈடுபடவேண்டாம். நிலம் வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது. கமிஷன் வியாபாரத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்குவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் வரும்.
கன்னி
உங்கள் உழைப்புக்குப் பரிசாக அலுவலகத்தில் உன்னத உயர்வு கிடைக்கும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கும். உறவுகளில் இருந்த விரிசல் விலகி ஒற்றுமை ஓங்கும். அடுத்தவருக்குச் செய்யும் உதவியால் வெளிவட்டாரச் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
தொழிலை மேம்படுத்த நீங்கள் கேட்ட உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும். முதலாளியின் அன்பு பணியாட்களை உற்சாகம் அடையச் செய்யும். கட்டுமானத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் உங்கள் கை ஓங்கி நிற்கும். அரசு வேலையில் புதிய ஒப்பந்தம் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்
விருச்சிகம்
முன்பு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும். திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த குழப்பமான சூழ்நிலை விலகும். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக நடக்கும். சிறு தொழில் வியாபாரிகள் அனுகூலம் பெறுவார்கள். இரும்பு, எலக்ட்ரிகல், சிமெண்ட் தொழில் ஏற்றமுடன் நடக்கும். தாய் தந்தையரின் ஆசி கிடைக்கும்.
தனுசு
எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உங்கள் அவசரத்திற்கு அரசாங்க வேலைகள் நடக்காது. பைல்களில் கையெழுத்துப் போடும்போது நிதானமாகப் படித்துப் பாருங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பைனான்ஸ் தொழிலில் பணம் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையுடன் இருங்கள்.
மகரம்
அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். அது சிக்கலை ஏற்படுத்தும். ஆடம்பரச் செலவுகள் உங்கள் கையிருப்பை கரைக்கும். வாழ்க்கைத் துணையோடு இருந்த பிணக்கு மறைந்து வசந்தம் வீசும். நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் தரக்கூடிய நாள். யாரையும் மட்டம் தட்டிப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.
கும்பம்
உங்கள் மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பும் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
மீனம்
பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணியுங்கள். அவர்களின் படிப்புக்காக பழைய சேமிப்பைப் பயன்படுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அனுகூலமான பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி விட்டுக்கொடுத்து நடப்பீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.6.2022
திதி : இன்று அதிகாலை 02.22 மணி வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
நட்சத்திரம் : இன்று இரவு 09.50 மணி வரை ஆயில்யம். பின்னர் மகம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 01.49 மணி வரை துருவம். பின்னர் வியாகாதம்.
கரணம் : இன்று காலை 02.22 மணி வரை பாலவம் . பின்னர் பிற்பகல் 02.57 மணி வரை கௌலவம். பிறகு தைத்துலம்
அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.51 மணி வரை மரணயோகம். பின்னர் இரவு 09.50 மணிவரை சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2