இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்:
ராசிக்கு சிறப்பாக அமையும் நாள். வேலையாக இருந்தாலும் சரி, குடும்ப மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இன்று பணியிடத்தில் சற்று பணிச்சுமையாக இருக்கும். இன்று மகிழ்ச்சியான மனநிலை நன்றாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையின் முழு பலனையும் பெறுவீர்கள். இன்று வருமானமும் கூடும். குடும்பத்தின் தேவைகளை முழுமையாக கவனித்துக் கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்று ரிஷபம் ராசி குடும்ப வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கடின உழைப்பும் புரிதலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தை கவனித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள்.
மிதுனம்
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் பற்றாக்குறைகள் சரிசெய்யப்படும்.
கடகம்
நேயர்களே பல்வேறு வகைகளில் ஒரு வளமான பலனை பெறக்கூடிய இனிமையான நாளாக இன்று இருக்கும். இறுதியாக லாபங்கள் அதிகரிக்கும். இருந்த பிரச்சனைகள் எல்லாம் குறையும். பிரச்னைகள் எல்லாம் விலகி அடைய வேண்டிய லாபம் அடைவீர்கள்.
சிம்மம்
புதிய தொழில் முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. . நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உள்ளது.
கன்னி
நேயர்களே உங்களுக்கு இந்த நெருக்கடிகள் விலகி நற்பலன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெளியூர் மூலமாக ஒருசில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
துலாம்
நேயர்களே எனினும் சற்று நிதானமாக செயல்பட்டால் மிகுந்த பலனை அடையலாம். பகல் நேரத்தில் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
நேயர்களே உங்களுக்கும் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியான பலன்கள் பெறுவீர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தேவையற்ற பணிச்சுமை ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். அதிலும் குறிப்பாக வயதில் மூத்தவர்கள் உடன் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
தனுசு
நேயர்களே உங்களுக்கும் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியான பலன்கள் பெறுவீர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தேவையற்ற பணிச்சுமை ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். அதிலும் குறிப்பாக வயதில் மூத்தவர்கள் உடன் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
மகரம்
நண்பர்களே உங்களுக்கு எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு நாம் ஏன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தனவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால், அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் கூடிய நிலையுள்ளது.
கும்பம்
நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய யோகமான நிலை இன்று உள்ளது. எதிலும் வெற்றிகரமாக இருக்கும். நண்பர்கள் மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழிலிலிருந்த தேக்கங்கள் எல்லாம் குறையும்..
மீனம்
மக்களே நீங்கள் எதிலும் சற்று சுறுசுறுப்பாக செயல்பட்டு அனுகூல பலனை அடைவீர்கள். பண வரவு சற்று சாதகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவில் கவனமாக இருப்பது அவசியம்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை 4.6.2022
திதி : இன்று அதிகாலை 12.48 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று இரவு 07.56 மணி வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 01.28 மணி வரை விருத்தி. பின்னர் துருவம்.
கரணம் : இன்று காலை 12.48 மணி வரை பத்தரை . பின்னர் பிற்பகல் 01.35 மணி வரை பவம். பிறகு பாலவம்.
அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.51 மணி வரை மரணயோகம். பின்னர் இரவு 07.56 மணிவரை சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2