ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை 2.6.2022

திதி : இன்று இரவு 10.59 மணிவரை திரிதியை திதி. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று பகல் 03.12 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 12.15 மணி வரை சூலம். பின்னர் கண்டம்.

கரணம் : இன்று காலை 11.00 மணி வரை தைதுலம். பின்னர் இரவு 10.59 மணி வரை கரசை. பிறகு வணிசை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.51 மணி வரை சித்தயோகம். பின்னர் 03.12 மணிவரை மரணயோகம். பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பங்குப் பரிவர்த்தனை வியாபாரம் சுமாராக நடக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலை காணப்படும். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து கொள்ளுங்கள். வீண் பிடிவாதம் பிரச்சினைகளைக் கொண்டு வரும். பணவரவு சுமாராக இருக்கும்.

ரிஷபம்

கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரம் சூடு பிடிக்கும். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மனையில் நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் மனநிம்மதி ஏற்படும். வெளிநாடுகளிலிருந்து வியாபாரத்திற்குத் தேவையான நல்ல செய்தி வரும்.

மிதுனம்

எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். பந்தய வியாபாரங்களில் ஈடுபடவேண்டாம். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ரத்த காயங்கள் ஏற்படலாம். கொடுத்த பணத்தை கேட்டால் தகராறு உண்டாகும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. கடன் சுமை அதிகரிக்கும்.

கடகம்

பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்த வேண்டும். கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். நல்ல நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யக்கூடாது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் மாணவர்கள் சேருவார்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலமான காரியம் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தின் மூலமாக அதிக பண வரவு இருக்கும்.

கன்னி

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவார்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்பாக நடக்கும். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள். அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெருகும். புதிய வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்

துலாம்

புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தடை நீங்கும். குடும்பப் பெண்களுக்கு குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். மற்றவர்களுக்காக வாதாடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளின் கல்விக்காக அலைய வேண்டிய நிலை உருவாகும். மற்றவர்கள் உங்கள் கருத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும்.

விருச்சிகம்

எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலால் டென்ஷன் உண்டாகும். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். வியாபாரம் மந்தமாக நடக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகக் கிடைக்கும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்க்கவும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

தனுசு

எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். ஊழியர்களால் உற்பத்தி பெருகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகம் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள்.

மகரம்

ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் அசதி உண்டாகும். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் இட மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வீர்கள். உறவினர்களிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்க முடியாது. கலைத்துறை
யினர் தொழிலில் பிரகாசிப்பார்கள்.

கும்பம்

வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டுப் பெறுவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு இருந்த மனக்குழப்பம் மறைந்துபோகும்.

மீனம்

குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினை தலை தூக்கி பின்னர் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். அலுவலக வேலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். அரசியல்வாதிகள் ஒத்துழைப்பால் அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *