ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை 11.5.2022

திதி : இன்று மாலை 04.18 மணிவரை தசமி திதி. பின்னர் ஏகாதசி.

நட்சத்திரம் : இன்று மாலை 03.30 மணி வரை பூரம் . பின்னர் உத்திரம்.

நாமயோகம் : இன்று மாலை 04.21 மணி வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

கரணம் : இன்று அதிகாலை 04.13மணி வரை தைதுலம். பின்னர் மாலை 04.18 மணி வரை கரசை. பிறகு வணிசை

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.53 மணி வரை சித்த
யோகம்.பின்னர் அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 0

இன்றைய ராசிபலன்:

மேஷம்:

மேஷ ராசியினர் புகழின் உச்சத்திற்குச் செல்லக்கூடிய நாளாக இருக்கும். மற்றவர்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்த முயல்வீர்கள். . உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களுடன் சச்சரவுகளை தவிர்த்துக்கொண்டால் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்:

இன்று சரியான திட்டமிடலுடன் உழைத்தால், உங்களுக்கு அதற்கான பலன்கள் சில மடங்கு அதிகமாக கிடைக்கும். பணியிடத்தில் தங்கள் கடமை உணர்ந்து செய்வது அவசியம். உரிய பாராட்டு மற்றும் மரியாதையைப் பெறலாம்.

மிதுனம்:

புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் மனதில் தோன்றலாம் அல்லது அது நிஜமாகலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், நீங்கள் புகழ் பெற வாய்ப்புள்ளது.

இலக்கியம், கலை, எழுத்து, இசை, திரைப்படம் அல்லது விளையாட்டு போன்ற படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளையும், அதில் நல்ல பாராட்டு பெறுவதோடு, லாபகரமான சலுகைகளையும் பெறலாம்.

கடகம்:

கடக ராசிக்கு நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். பல வழிகளில் உங்களுக்கு லாபம் தரக்கூடிய வாய்ப்புகள், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வணிக சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். இன்று எந்த செயலை கையில் எடுத்தாலும் அதில் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

சிம்மம்:

இன்று பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக உங்கள் காரியங்கள் சீராகி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும், நிதி நன்மைகளைப் பெற புதிய வழிகளையும் காண்பீர்கள்.

பெரியோரின் அன்பும் ஆலோசனையும் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். நற்பெயர் கிடைக்கும்.

கன்னி:

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் பிற முயற்சிகளிலும் உங்கள் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும்.

துலாம்:

வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும்.

விருச்சிகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்.

தனுசு

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மகரம்

இன்று முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்

நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

மீனம்

தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை.

உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு. இருப்பினும் வெற்றி நிச்சயம் தனவரவு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *