இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஞாயிறு கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்கள் மிகுந்த லாபத்தைத் தரும். முன்பு ஸ்டாக் வைத்த பொருட்கள் இரண்டு மடங்கு வருமானம் தரும்.
ரிஷபம்
வேலையில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றும். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கத்தின் மூலம் ஆகவேண்டிய காரியங்கள் தாமதமாக நடக்கும். வெளியூர்ப் பயணங்களால் செலவு அதிகரிக்கும்.
மிதுனம்
உங்கள் பெயரைக் கெடுக்க உடன் இருப்பவர்களே முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக பணம் புரட்ட சிரமப்படுவீர்கள். வியாபாரம் மந்தமாக நடக்கும். பங்குச்சந்தை அதிக பயன் தராது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். வேலையிடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளால் பிரச்சனையைச் சந்திப்பீர்கள்.
கடகம்
நிலையான வருமானத்தை உருவாக்க பாடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வீர்கள். ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பாக நடக்கும். போட்டிகளுக்கு இடையே அரசாங்க காண்ட்ராக்டுகள் பெறுவீர்கள். பிள்ளைகள் கல்விச் சுற்றுலா செல்வார்கள் வங்கிச் சேமிப்பு உயரும்.
சிம்மம்
“உனக்கும் எனக்கும் தான் பொருத்தம். அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்” என்று தொழில் பார்ட்னர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். காய்கறித் தோட்டம் போட்டவர்கள் கணிசமான பலன் பெறுவார்கள். சேமிப்பில் இருந்த புளி நல்ல விலைக்குப் போகும். தொழிலுக்கு பக்கபலமாக நண்பர்களின் உதவி கிடைக்கும். வருமானங்கள் உயரும்.
கன்னி
“கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா” என்று இளம் வயதினர் இல்லறத் துணை தேடுவார்கள். திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும். தந்தையார் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள். சிறு குறு தொழில் செய்பவர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். சேமிப்பில் இருந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். புதிய ஆர்டர்களை வெளியூர்ப் பயணங்கள் மூலம் பெறுவீர்கள்.
துலாம்
“போனால் போகட்டும் போடா” என்ற விரக்தி நிலையில் இருப்பீர்கள். ஏதோ ஒருவகையில் வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படும். வாகனங்கள் பழுதாகி சிரமப்படுத்தும். நம்பிச் சொன்னவர்கள் இல்லை என்று கை விரிப்பார்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கும் கிறுக்குத்தனத்தைச் செய்யாதீர்கள். தேவையில்லாத செலவுகள் கைமீறி போகும்.
விருச்சிகம்
“காலங்களில் அவள் வசந்தம்” என்று காதல் வலை வீசுவீர்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல பலனைக் கொடுக்கும். வெளியூரிலிருந்து தொழிலுக்குத் தேவையான நல்ல செய்தி வரும். வாக்கு வன்மையால் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
தனுசு”
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி” .சிறிய முதலீடுகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். வியாபாரத்தில் கொழுத்த லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குச் சேர வேண்டிய பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பலசரக்கு வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பார்கள். வராக்கடன் வந்து சேரும்.
மகரம்
“கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல” குடும்பச் செலவுகள் கட்டு மீறிப் போகும். சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க ஆசைப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். போட்ட முதலீட்டுக்கு தகுந்த லாபம் கிடைக்கும். ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். பணியிட மாறுதல் ஏற்படும்
கும்பம்
“சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க”என்று உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள். கடுமையாக உழைத்து கடனை அடைப்பீர்கள். அலுப்பின்றி வேலை பார்த்தால் முதலாளிகள் சந்தோஷம் அடைவார்கள். கிம்பளம் எதிர்பார்க்காமல் அரசு ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும். ஐடி ஊழியர்களுக்கு வேலையிடம் ஒரு போர்களமாகக் காட்சிதரும்.
மீனம்
“நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே” எந்த நிலையிலும் தொழில் முன்னேற்றமாக நடக்கும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். உணவுப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வீர்கள். தென்னந் தோப்புக் குத்தகை மூலமாக வருமானம் பெருகும் பைனான்ஸ் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் உச்சம் பெறுவீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29.5.2022
திதி : இன்று மாலை 03.49 மணிவரை சதுர்த்தசி திதி. பின்னர் அமாவாசை.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.42 மணி வரை பரணி. பின்னர் கார்த்திகை.
நாமயோகம் : இன்று இரவு 10.55 மணி வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம் .
கரணம் : இன்று அதிகாலை 03.17 மணி வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 03.49 மணி வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்
திதி : இன்று மாலை 03.49 மணிவரை சதுர்த்தசி திதி. பின்னர் அமாவாசை.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.42 மணி வரை பரணி. பின்னர் கார்த்திகை.
நாமயோகம் : இன்று இரவு 10.55 மணி வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம் .
கரணம் : இன்று அதிகாலை 03.17 மணி வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 03.49 மணி வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம்