ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும். இன்றைய கிரக நிலவரப்படி12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.5.2022

திதி : இன்று பகல் 02.45 மணிவரை திரியோதசி திதி. பின்னர் சதுர்த்தசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.14 மணி வரை அஸ்வினி. பின்னர் பரணி.

நாமயோகம் : இன்று இரவு 11.00 மணி வரை சோபனம். பின்னர் அதிகண்டம் .

கரணம் : இன்று அதிகாலை 02.28 மணி வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.45 மணி வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 04.14மணி வரை அமிர்தயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மேஷ ராசியினர் உங்கள் வேலையை சிறப்பாக, சுறுசுறுப்புடன் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஒருவரின் உதவியால் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். பெண்கள் இன்று வீட்டு வேலைகளில் மும்முரமாகச் செயல்படுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு வேலையில் நல்ல வெற்றியைத் தரக் கூடிய நாளாக இருக்கும், உங்களின் கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் எல்லா வகையிலும் துணை நிற்கும். நிதி நிலை நன்றாகவே இருக்கும். இன்று நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் வெற்றி பெறக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. சொத்து, புதிய ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் தன வரவை, கவனமாக செலவிடுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசியினர் ஒருவருடன் தேவையில்லாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள்.

அதனால் வேலை, வியாபாரம் என எதுவாக இருந்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி உங்களுக்கு ஊக்கத்தை தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் புதிதாக அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வணிகத் திட்டத்தை செயல்படுத்த இது ஒரு நல்ல நேரம். புத்திசாலித்தனமாக எந்த ஒரு வேலையையும் செய்வதால் அதிலிருக்கும் சிரமங்கள் எளிதாக கடப்பீர்கள். இளைஞர்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். இன்று தடைப்பட்ட வேலையை முடிக்க சிறந்த நாளாக இருக்கும்.

சிம்மம்:

இன்று புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டாம். உங்கள் வேலை சிறப்பாக நடந்தேற, முதலில் விநாயகரை வழிபட்டு எந்த ஒரு வேலையையும் தொடங்குங்கள்.

நண்பகலுக்கு மேல் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள், உறவினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். உங்கள் நண்பர் அல்லது உறவினரை சந்திப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு இன்று சந்திராஷ்டம நாள். அதனால் எந்த ஒரு செயலையும் கவனமாக செய்யவும். பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடன் கனிவுடன் நடந்து கொள்ளவும்.

துலாம்

துலாம் ராசியினர் சிறப்பான வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கும். மற்றவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமாட்டீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய நண்பரின் உதவியால் உங்கள் திட்டங்களில் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம் கிடைக்கும். இன்று நிதி நிலை நன்றாக இருக்கும், ஆனால் திடீரென்று செலவுகளும் அதிகரிக்கும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளின் ஆரம்பம் சிறப்பாக அமையும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் வேலையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் நேர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றவும். இன்று, வணிகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று நல்ல லாபம் கிடைக்கும்

மகரம்

இன்று மகர ராசிக்காரர்கள் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறுவீர்கள். அவர்கள் அறிவுரையும், ஆதரவும் வேலையில் வெற்றி பெற உதவும். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைக்க புதிய நட்பு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டம் நல்ல ஆதரவைத் தரும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் வேலையைப் பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியினர் இன்று மற்றவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். உங்கள் உடல் நலனில் அக்கறையுடன் இருக்கவும். அலட்சியம் வேண்டாம். பணியிடத்தில் உங்களின் விடாமுயற்சிக்கு நல்ல பாராட்டும், முன்னேற்றமும் கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியால் பண லாபம் பெற வாய்ப்புள்ளது. நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *