ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.5.2022

திதி : இன்று பகல் 02.04 மணிவரை ஏகாதசி திதி. பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.39 மணி வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 01.36 மணி வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

கரணம் : இன்று அதிகாலை 02.17 மணி வரை பவம். பின்னர் பிற்பகல் 02.04 மணி வரை பாலவம். பிறகு கௌலவம்.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 02.39மணி வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நண்பர்கள் உங்கள் மனதில் தேவையற்ற ஆசைகளை உருவாக்குவார்கள். மயங்கி விடாதீர்கள். தொழிலை நடத்த கடினமாக உழைக்க வேண்டும். அரசு வேலையில் லஞ்சம் வாங்காதீர்கள். ஆபத்து காத்திருக்கிறது. நேர்மையான வழியில் சென்றால் நிம்மதி நிலைக்கும். கொடுத்த கடனை வாங்குவதில் சிரமம் ஏற்படும். யோசிக்காமல் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

ரிஷபம்

முடங்கிக் கிடந்த தொழிலுக்கு முழு முயற்சியில் உயிர் கொடுப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். வியாபாரத்தில் வரும் லாபத்தை சேமிப்பாக மாற்றுவீர்கள். கொடுத்த கடன் தடையில்லாமல் திரும்ப வரும். வெளியூர்ப் பயணங்களால் புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்

மிதுனம்


பழைய கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அணுக்கமான நண்பரின் ஆலோசனையால் ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவரின் வியாபாரத்திற்கு உதவி செய்வீர்கள். அரசு காண்ட்ராக்ட் டுகளில் அமோக லாபம் கிடைக்கும். கணினித்துறை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். அசையாச் சொத்து வாங்குவீர்கள்.

கடகம்

அதிக சிரத்தையுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் தொழிலில் அதிக வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தயாராவார்கள்.

சிம்மம்

வாழ்க்கைக்கு வருமானம் தேவைதான். அதற்காக தவறான வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். வியாபாரம் சுமாராக நடக்கும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வெடிக்கும். எதையும் ஆலோசித்துச் செய்யுங்கள். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை

கன்னி

போட்ட முதலீடுகளில் இருந்து திருப்திகரமான லாபம் கிடைக்கும். பொன் நகைகள் வாங்கி வீட்டுப் பெண்களின் புன்னகைகளைப் பரிசாகப் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு கல்யாண வைபோகம் நடந்தேறும். பிள்ளைகள்தான் சற்று பிரச்சனையைக் கொடுப்பார்கள். கணவனை இழந்த பெண்மணிக்கு மறுமணம் நடந்து வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகும்.

துலாம்

கடினமான உழைப்பு உங்களுக்கு மனச்சோர்வைக் கொண்டுவரும். குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என சிலர் ஆசைவார்த்தை கூறுவார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் உறவினர்களால் குழப்பம் உண்டாகும். சாதுரியமாக சரிசெய்து கொள்ளுங்கள். மன அழுத்தம் கூடினால் ரத்த அழுத்த நோய் உங்களைப் பாதிக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். என்றோ வாங்கிப்போட்ட வீட்டுமனை நல்ல விலைக்கு விற்பனையாகும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். மனைவி மனதுக்கு இதமாக நடந்து கொள்வார். தொழிலுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். வியாபாரம் மிக ஏற்றமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுப் போன மங்கல நிகழ்ச்சி நடக்கும்.

தனுசு

பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆன்லைன் வியாபாரம் அற்புதமாக நடக்கும். பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்யுங்கள். உங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை சகோதரர் தானாகக் கொடுப்பார். மற்றவருக்குச் செய்யும் உதவியால் உங்களின் வெளிவட்டாரச் செல்வாக்கு அதிகரிக்கும்

மகரம்

பெரிதும் நம்பியிருந்த ஒரு செயல் தாமதப்படும்.காலை வாரி விட நினைக்கும் துரோகிகளை அடையாளம் காண்பீர்கள். தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தனியார்துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். சகோதர உறவுகளில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். பங்கு வியாபாரத்தில் பதமாக முதலீடு செய்யுங்கள்.

கும்பம்

கடுமையான நெருக்கடிகளைக் கடைந்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த விவகாரம் விலகும். மனதில் இருந்த நோய்கள் குறித்த அச்சம் நீங்கும். மார்க்கெட்டிங் துறைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பிளம்மிங் பணியில் ஈடுபடுவோர் அதிக வருமானம் பெறுவார்கள். வீட்டுமனை வாங்குவதற்கான உங்கள் முயற்சி ஈடேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *