சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்று செவ்வாய் கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை 24.5.2022

திதி : இன்று மாலை 03.26 மணிவரை நவமி திதி. பின்னர் தசமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.03 மணி வரை சதயம். பின்னர் பூரட்டாதி.

நாமயோகம் : இன்று காலை 05.15 மணி வரை வைதிருதி. பின்னர் விஷ்வகம்பம்.

கரணம் : இன்று அதிகாலை 04.07 மணி வரை தைதுலம். பின்னர் மாலை 03.26 மணி வரை கரசை. பிறகு வணிசை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 03.03மணி வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்கு வேலையில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எல்லோருடனும் சுமுகமான உறவைப் பேணுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் மரியாதை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பும், புரிதலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது.

மேஷம்:

இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிட, அதற்காக நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் வேலைக்கான பணியிடத்தில் நல்ல சூழல் அமையும்.

மிதுனம்:

இன்று பணம் தொடர்பான விஷயங்களில் நற்பலனைப் பெறுவீர்கள். பழைய நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தையோ, பேசியோ மகிழ்வீர்கள். மனம் மகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாளாகா இருக்கும். இன்று, நீங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி, வேலையில் வெற்றி பெறுவீர்கள். அதிக கோபம் பிரச்சனையை அதிகரிக்கும். இனிய பேச்சாலும், புத்திசாலித்தனத்தாலும் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்:

இன்று சில சாதகமற்ற நிலை ஏற்படலாம். உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும், நாள் முழுவதும் ஓய்வின்றி இருப்பீர்கள். குடும்ப சண்டை முடிவுக்கு வரும். எந்த ஒரு செயலையும் கவனத்துடன் செய்யவும். பேச்சில் கனிவு அவசியம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.

வேலை, தொழில் தொடர்பான சிலரின் ஆலோசனை உங்களுக்கு உயர்வைத் தருவதாக அமையும். குடும்பத்தில் உங்கள் நேர்மறையான நடத்தை மற்றவர்களை ஈர்க்கும்.

கன்னி

இன்று நிம்மதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய திட்டங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். எந்த ஒரு வேலையிலும் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டி, பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்கு இனிமையான நாளாக அமையும். வீட்டில் அன்பும், புரிதலும் அதிகரிக்கக்கூடிய நாள். எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் இனிமையான பேச்சால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். தொழிலதிபர்கள் நேர்மையுடன் பணியாற்றுவது நல்லது. உங்கள் காதலிக்கு உங்கள் நிலையை விளக்குவதில் சில சிரமங்கள் இருக்கலாம்.

விருச்சகம்

இன்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். இன்று பிறருக்குக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு ராசி:

இன்று நீங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்லைனில் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பின் பலன் இன்று நிச்சயம் கிடைக்கும். திருமண விழா அல்லது மங்களகரமான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். உறவுகளில் சில புதிய புத்துணர்ச்சி ஏற்படும்.

மகரம்

மகர ராசியினர் பணியிடத்தில் இருக்கும் அரசியலிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு புதிய விஷயத்தையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் இனிமையான பேச்சால் எந்தத் துறையிலும் வெற்றியின் உச்சத்தை எட்டுவதற்கு உதவியாக இருக்கும். உணவு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கு எந்த துறையிலும் நல்ல வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், பணத்தை சரியான வகையில் கையாளவும். மாணவர்களுக்கு உகந்த நாளாகவும், தேர்வில் சிறப்பான வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. மனதில் எதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முகம் கவலையில் பிரகாசிக்காமல் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். அறிவும், அனுபவமும் உள்ள ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். புதிய வருமானம், லாபம் பெறுவதற்கான வழிகள் கிடைக்கும். இன்று பண பரிமாற்றம், லாபம் பெற மிக முக்கியமான நாளாக இருக்கும், பணம் தொடர்பான விஷயங்கள் ஆதாயம் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *