சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.5.2022

திதி : இன்று மாலை 04.47 மணிவரை அஷ்டமி திதி. பின்னர் நவமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.49 மணி வரை அவிட்டம். பின்னர் சதயம்.

நாமயோகம் : இன்று காலை 07.36 மணி வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.

கரணம் : இன்று காலை 05.38 மணி வரை பாலவம். பின்னர் மாலை 04.47 மணி வரை கௌலவம். பிறகு தைதுலம்

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 03.49 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.00 முதல் 07.00 மணி வரை
காலை: 09.00 முதல் 10.00 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன்

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய வளமும், வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அற்புத நாளாக இருக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் –

மனதில் எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேறும் என்றாலும் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். ஒன்றும் இல்லாத விஷயத்திற்குக் கூட வீண் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன்

நேயர்களே உங்களுக்கு எளிதில் முடியக்கூடிய காரியங்களுக்கு கூட சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது இருக்கும். வசதிகளை கூட அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.

கடகம் இன்றைய ராசிபலன் –

நேயர்களே நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். எளிதில் முடியக் கூடிய காரியங்கள் கூட சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது இன்று. நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது அவசியம்.

சிம்மம் இன்றைய ராசிபலன் –

நேயர்களே உங்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக திருப்திகரமாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உள்ளது. உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo

நேயர்களே உங்கள் வளமும் வலிமையும் அதிகமாக இருக்கும்.எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய பலனைப் பெறலாம். வேலை ஆட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்

துலாம் இன்றைய ராசிபலன் – Libra

புண்ணிய காரியங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதால் பெரிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio

நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் சற்று சிந்தித்து செயல்படுவது அவசியம். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருப்பது நல்லது.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius

நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபகரமான பலன்களே அடையக்கூடிய இனிய நாளாக என்று இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய யோகமான நாள் இன்று.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn

நேயர்களே உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். இருக்குமிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கூட கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்த மறைமுகப் பிரச்சனைகள் கூட குறைய கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius

நேயர்களே தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் எதிலும் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும்.

இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படும். குறிப்பாக நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. 

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces

நேயர்களே நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படலாம். அதனால் வீண் செலவும் ஏற்படலாம். எந்த ஒரு செயலையும் நீங்களே முன்னின்று செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *