சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் வைகாசி மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமை 19.5.2022

திதி : இன்று அதிகாலை 03.24 மணிவரை திரிதியை திதி. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று காலை 09.36 மணி வரை மூலம் . பின்னர் பூராடம்.

நாமயோகம் : இன்று மாலை 06.57 மணி வரை சாத்தியம். பின்னர் சுபம்.

கரணம் : இன்று அதிகாலை 03.24 மணி வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 02.12 மணி வரை பவம். பிறகு பாலவம்.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.52 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மேஷ ராசிக்கு பிரச்னை நீங்கக்கூடிய நாளாக இருக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான வேலைகள் செய்ய சாதகமான நாள். உங்களுக்கு நெருக்கமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கோபத்தையும் ஆர்வத்தையும் கட்டுப்படுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். பண விஷயத்திலும், வரவு செலவுகளில் கவனம் தேவை. நீங்கள் செய்யும் பணி சமூகம் அல்லது சமூக மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கும். முக்கியமான வணிக முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு நிம்மதியாக நேரத்தைக் கழிப்பீர்கள். நண்பரின் உதவியால் எளிதாக வேலையை முடிப்பீர்கள். நிம்மதி பெறுவீர்கள். எந்த வகையான வணிக முதலீடுகளையும் செய்ய வேண்டாம். நேரம் சாதகமற்றது.

கடகம்:

கடக ராசிக்காரர்களின் பெரும்பாலான வேலைகள் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அனுபவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஆளுமை கொண்ட ஒருவரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள், முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு சாதகமான காலம். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு தங்கள் வேலையைத் திட்டமிட்டுச் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிலம், வாகனம் வாங்குவதற்கான திட்டம் நிறைவேறலாம். தொழில் சம்பந்தமான எந்த ஒரு வேலையிலும் சாதக நிலை இருக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். காதல் விவகாரங்களில் ஏமாற்றம் அல்லது துரோகம் இருக்கலாம். உடல்நலம் தொடர்பாக கவனக்குறைவுடன் இருக்க வேண்டாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் வேலையில் கவனம் செலுத்தி வீடு, குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். பிரச்னைகளையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைய கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு நேயர்களே எங்களுக்கு பல்வேறு வகையில் ஏற்றம் தரும் பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு பல்வேறு வகையில் வளமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இன்று இருக்கும். நண்பர்கள் மூலமாக ஒருசில அனுகூலமான பலன்கள் அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மகரம்:

மகரம் ராசிக்காரர்கள் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். இருந்த உடல் பாதிப்புகள் எல்லாம் ஓரளவு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கூட இன்றைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முடியக் கூடிய செயல்கள் கூட சற்று தாமதமாகலாம் பணவரவு சாதகமாக இருந்தாலும் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படலாம். கணவன்-மனைவி ஒன்று இல்லாத விஷயத்திற்கு கூட மனக்கசப்பு ஏற்படலாம். அதிலும் குறிப்பாக உங்களுடைய ஏழாம் முன்கோபத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *