சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை 9.5.2022

திதி : இன்று பிற்பகல் 03.28 மணிவரை அஷ்டமி திதி. பின்னர் நவமி.

நட்சத்திரம் : இன்று பகல் 02.18 மணி வரை ஆயில்யம் . பின்னர் மகம்.

நாமயோகம் : இன்று மாலை 05.34 மணி வரை விருத்தி. பின்னர் துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 02.53 மணி வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 03.28 மணி வரை பவம். பிறகு பாலவம்.

அமிர்தாதி யோகம்: இன்று பகல் 02.18 மணி வரை சித்தயோகம்.பின்னர் மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.

ரிஷபம்

பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு வீடு கட்டுவது சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்வதை பற்றிய யோசனைகள் அதிகமாக உண்டாகும் இவற்றில் வெற்றி கிடைக்கும் .

மிதுனம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் .

கடகம்

நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

சிம்மம்

எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் உங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது திருமணம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

படிப்பை முடித்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் மனதில் மகிழ்ச்சி நிலவும் முகம் பிரகாசமாகத் தோன்றும் எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் இறைவன் அருள் துணை நிற்கும்.

துலாம்

காதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை இன்று துவக்கலாம் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மற்றும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு சேவை தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்

விருச்சிகம்

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் புதிய கல்வி வாய்ப்புகள் தென்படும் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

தனுசு

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், விநாயகர் பெருமானை வழிபட விக்கினங்கள் விலகும்.

மகரம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.

கும்பம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும் படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள் ஒருசிலருக்கு வாகன யோகம் உண்டாகும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது

மீனம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆயில் அண்ட் கேஸ் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சிலருக்கு நாடு விட்டு நாடு மாறுவது போன்ற சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும் இவற்றில் வெற்றி காண்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *