சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஞாயிறு கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள். குடும்பத்தினர் வருத்தம் அடையக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு வேலை பார்ப்பீர்கள்.

ரிஷபம்

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள். அடுத்து கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள்.வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள்.உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள்.

மிதுனம்

பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள். ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். டீக்கடை வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். பெட்டிக்கடை வியாபாரிகள் பிரச்சனை தீரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். குடும்பத்தினர் உங்கள் மனமறிந்து நடப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

கடகம்

தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியில் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டுங்கள். வெளியூர் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும். எதிர்காலம் கருதி பொறுமையுடன் இருப்பீர்கள். மனநிம்மதி குறையும்

சிம்மம்

வேலையாட்கள் பற்றாக்குறையால் தொழில் முடங்கும். மெட்டீரியல் இல்லாமல் கட்டிடத் தொழில் சுணங்கும். சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்காமல் எலெக்ட்ரிசியன்கள் திணறுவார்கள். வெளியிடப் பயணங்களால் பயன் அதிகம் இருக்காது. நிதானத்தை இழக்காமல் வேலை பாருங்கள். டீக்கடையில் அமர்ந்து ஊர்வம்பு பேசாதீர்கள்.

கன்னி

எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். மளமளவென்று பணவரவு அதிகரிக்கும். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள். அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சுறுசுறுப்பாக நடக்கும். ஒரு மடங்கு எதிர்பார்த்த லாபம் இரு மடங்காக பெருகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

துலாம்

பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனைப் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள்.

விருச்சிகம்


வேலையிடத்தில் சக ஊழியர்கள் வில்லங்கம் ஏற்படுத்துவார்கள். புரிந்து கொள்ளாமல் பேசி குடும்பத்தினர் உங்கள் மனதைக் காயப்படுத்துவார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள்.பிள்ளைகளின் பிரச்சினைக்காக கல்லூரிக்குச் செல்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வர தாமதமாகும். அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்காது.

தனுசு

எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சகோதரிகள் திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். திருப்திபடுத்த முடியாது. கையில் வைத்திருக்கும் பணத்தை கவனமாகக் கையாளுங்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்லுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். உறவுகள் உடைந்து போகும். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்

சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டு உங்களை உச்சி குளிர வைக்கும். உறவுகளை தேடிச் சென்று உதவுவீர்கள்
வீட்டுக்காக எதிர்பார்த்த வங்கி லோன் சாங்ஷன் ஆகும். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலன்களை அடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

கும்பம்

ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் மனம் நாட்டம் கொள்ளும். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் உங்கள் வேகத்தைப் பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் சோர்வடைய மாட்டீர்கள்.

மீனம்


உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் ஏதாவது பிரச்சனையைக் கொண்டு வருவார்கள். மனைவியின் பேச்சு கோபத்தைத் தூண்டும். பொறுமையைக் கடைபிடியுங்கள். வேலையிடத்தில் பெயரைக் கெடுக்க முயற்சி நடக்கும். உங்கள் முன்னேற்றம் பிடிக்காமல் குழி பறிப்பார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.5.2022

திதி : இன்று பிற்பகல் 02.18 மணிவரை சப்தமி திதி. பின்னர் அஷ்டமி.

நட்சத்திரம் : இன்று பகல் 12.30 மணி வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.

நாமயோகம் : இன்று மாலை 05.35 மணி வரை கண்டம். பின்னர் விருத்தி.

கரணம் : இன்று அதிகாலை 01.33 மணி வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.18 மணி வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *