ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ரிஷபத்தில் ராகு, கடகத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, புதன், மீனத்தில் சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் சற்று நிதானத்தை கைக்கொள்ளும். மற்றபடி கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். காலையில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஓய்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இருக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவற்றில் வெற்றியும் கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவற்றில் வெற்றியும் கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களே சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும். கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நாளில் முற்பகுதியில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய முயற்சி வெற்றியடைந்து வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். இவை தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்:

15 மார்ச் மாதம் 2022 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை பங்குனி 3
வளர் பிறை

திதி :- இன்று பிற்பகல் 1.08 மணி வரை துவாதசி பின்னர் திரியோதசி திதி
நட்சத்திரம் : இன்று இரவு 11.37 மணி வரையில் ஆயில்யம் பின்னர் மகம் நட்சத்திரம்

யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்

இன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 மணி முதல் 09:00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

காலை 10.30 முதல் 11.30 வரை
மாலை 7.30 மணி முதல் 8.30 வரை

ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை

குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் 01:30 மணி வரை
மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் :- வடக்கு

பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *