ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஞாயிறு கிழமையான இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் ஆகியவற்றை காண்போம்

இன்றைய ராசிபலன்

Aries மேஷம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு இனிய நாள் ஆகும் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும்.

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும் சுய தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் சற்று கூடுதலாகும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

Cancer கடகம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

Leo சிம்மம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக உள்ளது உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள் குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

Virgo கன்னி இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.

Libra துலாம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும் இனிய நாள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவை வெற்றி தருவதாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

Scorpio விருச்சிகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

Sagittarius தனுசு இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

Capricorn மகரம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் சிறப்பானதொரு நாளாகவே அமையும் கணவன் மனைவி உறவு மேம்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக தெரியும்.

Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

Pisces மீனம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.5.2022

திதி : இன்று அதிகாலை 02.32 மணிவரை அமாவாசை திதி. பின்னர் பிரதமை.

நட்சத்திரம் : இன்று இரவு 10.24 மணி வரை பரணி நட்சத்திரம். பின்னர் கார்த்திகை .

நாமயோகம் : இன்று மாலை 02.52 மணி வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

கரணம் : இன்று அதிகாலை 02.32 மணி வரை நாகவம். பின்னர் பிற்பகல் 03.05 மணி வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.

அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 06.00 முதல் 07.00 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.30 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்

நேத்திரம்: 0 – ஜீவன்: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *