ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

ரிஷபத்தில் ராகு, கடகத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிருந்த பலன்களை அடையக்கூடிய நாள் இன்று. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. நவீன கால பொருட்கள் வாங்கக்கூடிய யோகம் இன்று இருக்கிறது.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட கால தாமதம் ஏற்படும். வரவேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் வந்து சேரும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது மிக அவசியம்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். காலையில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஓய்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களே சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது மிக மிக அவசியம். குறிப்பாக பயணங்கள் செல்லும் போது வண்டி, வாகனங்களில் கவனமாக இயக்குவது நல்லது. அல்லது பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் சற்று நிதானத்தை கைக்கொள்ளும். மற்றபடி கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
இன்றைய நாள் உங்களுக்கு மிக சிறப்பான யோக பலன்கள் நடைபெறும் நாள். குடும்பத்தில் நிலவிய சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
எடுக்கும் முயற்சிகள் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய அருமையான நாள். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து, நிம்மதி ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். சிலருக்கு குழந்தைகளின் வாயிலாக ஒரு அனுபவமான பாடம் ஏற்படும். தொழில் ரீதியாக வளமான பலனை அடைவீர்கள்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
சகல விதத்திலும் நன்மையான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு இருக்கும். தொழிலில் ஒரு மேன்மையை அடைய வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 29 ஆம் தேதி மார்ச் 13, 2022, ஞாயிற்றுக்கிழமை

திதி: தசமி பகல் 10.22 மணி வரை அதன் பின் ஏகாதசி

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 08.05 மணி வரை அதன் பின் பூசம்

யோகம்: சோபனம் நாமயோகம்

கரணம் : கரசை அதன் பின் வணிசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *