ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும். இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும் இவைகளில் வெற்றி காண்பீர்கள்

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer

மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவற்றில் வெற்றியும் காண்பீர்கள்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும். வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும். கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
கூடுமானவரை தவிர்க்கலாம் உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் இம்மாதிரியான முயற்சிகளை அடுத்து வரும் இரு நாட்களுக்கு தவிர்த்துவிடுவது நல்லது தவிர்க்க முடியாத செலவினங்களால் கையிலுள்ள இருப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பங்கு வர்த்தக துறை சுற்றுலாத்துறை உணவுத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் ஊதிய உயர்வு கிடைக்கும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள் வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் வெற்றி தருவதாக அமையும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 12ம் தேதி திங்கள்கிழமை 25.4.2022

திதி : இன்று அதிகாலை 03.54 மணிவரை நவமி திதி. பின்னர் தசமி.

நட்சத்திரம் : இன்று இரவு 07.47 மணி வரை அவிட்டம் நட்சத்திரம். பின்னர் சதயம் .

நாமயோகம் : இன்று அதிகாலை 01.43 மணி வரை சுபம் யோகம். பின்னர் சுப்பிரம்.

கரணம் : இன்று அதிகாலை 03.54 மணி வரை கரசை. பின்னர் மாலை 03.43 மணி வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.58மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணிவரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *