ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் விளக்கம்

ஞாயிறு கிழமையான இன்று இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகான ராசிபலன்களையும் பஞ்சாங்கமும் பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்:
மேஷ ராசியினர் தங்கள் முதலீடு திட்டங்கள் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்களின் எதிரிகளை சிறப்பாக கையாளுவீர்கள். தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம். அலைச்சலான செயலில் ஈடுபட வேண்டாம். கையில் எடுத்த எந்த வேலையும் வெற்றி தரும்.

ரிஷபம்:
இன்று ரிஷப ராசிக்கு சில நல்ல லபாம் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளி சேர வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த விஷயங்களில் மன அழுத்தம் குறையும். நண்பர்கள், உறவினர்களிடம் இன்ப சுற்றுலா, பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களுக்கு பிடித்தவருடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வண்டி, வாகனம், சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையும். இருப்பினும் அது தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனை தேவை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த மிகுந்த கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. அலைச்சல் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கடகம்:
கடகம் ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றி தரக்கூடியதாகவும், முன்னேற்றப்பாதையில் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சட்ட விரோத செயல்களிலிருந்து தள்ளி இருப்பது அவசியம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு முடிவெடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான அன்பும், ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசிக்கு இன்று சொந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தின் ஆர்வம் சார்ந்த கவலை ஏற்படும். குழந்தைகளின் உதவி மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைவனை தியானிப்பது மன அமைதியைத் தரும்

துலாம்
உங்களுக்கு எடுக்கு முயற்சியில் சாதக பலன் உண்டாகும். பண வரவுகள் லாபகரமான பலன் உண்டாகும். என்றாலும் இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்
நீங்கள் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகலாம். இருப்பதை அனுபவிப்பதற்கு கூட தடை ஏற்படலாம். வேலைக்கு செல்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பணிச்சுமை இருக்கும். பேச்சில் சற்று கண்ணியம் தேவை. வண்டி வாகன பயன்பாட்டில் கவனம்.

தனுசு

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும் பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

கும்பம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் தன வரவு உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும் ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.

மீனம்
நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் யோக பலனைப் பெறலாம். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை பெறலாம். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களுடனான பகைமை விலகி உறவு வலுப்படும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.4.2022

திதி : இன்று காலை 07.55 மணிவரை அஷ்டமி திதி. பின்னர் நவமி.

நட்சத்திரம் : இன்று இரவு 08.50 மணி வரை திருவோணம் நட்சத்திரம். பின்னர் அவிட்டம் .

நாமயோகம் : இன்று அதிகாலை 04.25 மணி வரை சாத்தியம் யோகம். பின்னர் சுபம்.

கரணம் : இன்று காலை 07.55 மணி வரை கௌலவம். பின்னர் மாலை 05.55 மணி வரை தைதுலம். பிறகு கரசை.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.59 மணி வரை சித்தயோகம். பிறகு 08.50 மணி வரை அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 01.30 முதல் 02.30 மணிவரை
மாலை: 03.30 முதல் 04.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.30 முதல் 04.30 மணி வரை.

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *