ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஏப்ரல் 19, செவ்வாய் அன்று, செவ்வாய் ஆளும் விருச்சிக ராசியில் ராசியில் சந்திரன் இருக்க, சந்திரனும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திர ஸ்தானத்தில் இருக்கும் அதே வேளையில் குருவின் ஒன்பதாம் பார்வை விழுகிறது. இந்த கிரக நிலைகளுக்கு மத்தியில் உங்களுக்கு நாள் எப்படி இருக்க போகிறது, என்று காண்போம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்:
மேஷ ராசி அஷ்வினி நட்டத்திரத்திற்க்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய சங்கடங்கள் ஏற்படலாம். புதிய திட்டங்களைத் தள்ளி வைப்பது நல்லது. எந்த ஒரு செயலையும், ஆர்வமாகவும், நம்பிக்கையுடனும் செய்வதால் நற்பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
வழக்கு சார்ந்த விஷயங்களில் ஒதுங்கி இருங்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். மந்தமான மன நிலையில் இருப்பீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்:
இன்று உங்களின் தொழில், வியாபார திட்டங்கள் நிறைவேறலாம்.எதிர்காலம் குறித்த உங்களின் செயல்பாடுகள் சாதகமாக அமையும். சட்டம், வழக்கு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பண் சார்ந்த பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சரியான வகையில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் மகத்தான நன்மைகள் தரும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். தொழில் வாய்ப்புகள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும். தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பார தனவரவு போன்றவை உண்டாகும் நாளாகும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நன்மையைத் தரும். வியாபாரிகள் உங்களின் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் லாபம் பெறலாம். உங்களின் எந்த செயல்பாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்டம், வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்:
இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாளிகளின் முழு ஆதரவு கிடைக்காது. இதன் காரணமாக நீங்கள் எந்த முடிவையும் எளிதில் எடுக்க முடியாது. மனக் குழப்பத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும். உங்களின் மன வருத்தத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் செயல்பாடுகள் மூலம் லாபமும், நல்ல பலன்களைப் பெற்றிட முடியும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்:
வியாபார சூழலில் புதிய வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பதற்கு இன்று சாதகமான காலம். வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கக்கூடிய சாதகமான பலன் தரும். சில முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளவும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 6ம் தேதி செவ்வாய்கிழமை 19.4.2022

திதி : இன்று இரவு 07.33 மணி வரை திருதியை திதி. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : அதிகாலை 04.47 மணி வரை விசாகம் நட்சத்திரம். பின்னர் அனுஷம்.

நாமயோகம் : இன்று இரவு 07.34 மணி வரை வியதீபாதம். பின்னர் வரியான்.

கரணம் : இன்று காலை 08.38 மணிவரை வணிசை.பின்னர் இரவு 07.33 மணிவரை பத்தரை.பிறகு பவம்.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 04.47 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணிவரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *