ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 27 ஆம் தேதி மார்ச் 11, 2022, வெள்ளிக்கிழமை

திதி: நவமி முழுநாள்

நட்சத்திரம்: மிருகஷீரிடம் பகல் 02.35 மணி வரை அதன் பின் திருவாதிரை

யோகம்: ஆயுஷ்மான் நாமயோகம்

கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்

சித்தயோகம் நாள் முழுவதும்

நேத்திரம் 1 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் – மேற்கு

சூலம் பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசிபலன்:

இன்று துலாம் ராசியில் இருக்கும் சுவாதி நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.சுப முகூர்த்த நாள், மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச்சிறந்த நாளாகவே இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அல்லது நீங்கள் விருந்தினராகச் செல்வது போன்ற இனிய நிகழ்வுகள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேம்படும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தொழிலை வெற்றிகரமாக முன்னேற்றி செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாடாக இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். குடும்பத்தில் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கிடைக்கும் திடீர் தனவரவு ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். அது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம். தகவல் தொழில்நுட்பத் துறை மீடியா துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தகவல்களும் வந்து சேரும் கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் சிறப்பான மென்மை பெறும் சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாகச் சமாளிப்பீர்கள்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை காண்பார்கள் தனவரவை அதிகப்படுத்தும் செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு வீண் அலைச்சல்களையும் புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து உங்களை வெளிக்கொண்டுவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை பிரின்டிங் விஷுவல் மீடியா கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டு.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கை துறை பத்திரப்பதிவு கணக்குத் துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக செல்லும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும் பெண்களுக்கு சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *