ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

மேஷத்தில் புதன், ராகு, துலாமில் சந்திரன், கேது, மகரத்தில் சனி, கும்பத்தில்​ சுக்கிரன், செவ்வாய், மீனத்தில் குரு, சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்:

Aries மேஷம் இன்றைய ராசிபலன்
மேஷம்: மேஷ ராசிக்கு பயணங்கள் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரத்தில் அனுகூலமான பலகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கக் கூடிய நாள். உங்களின் எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்ட வேண்டாம். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். உங்களின் மன சோர்வுகள் நீங்கும். எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்
புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகள் சிறப்பான வகையில் நிறைவேறும். பரிசு பொருட்கள் கிடைக்க கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் சார்ந்த பயணங்கள் வெற்றிகரமாக அமையும். பங்கு சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் போன்ற விஷய உங்களுக்கு அனுகூலமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல பலன் கிடைக்கு. பெரிய வேலைகளை செய்து முடித்து மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் அவசரப்பட வேண்டாம். பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இனிய நாளாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. வேலைவாய்ப்புகள் புதிதாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும்.

Cancer கடகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும். சுய தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் சற்று கூடுதலாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

Leo சிம்மம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும்.

Virgo கன்னி இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் தங்கள் கல்வியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

Libra துலாம் இன்றைய ராசிபலன்

உறவினர்களின் ஒத்துழைப்பு அறவே இருக்காது. விளையாட்டு கூட வினையாக மாறும்.வெளியூர் பயணங்கள் வீண் அலைச்சலை மட்டுமே கொடுக்கும். பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையை கிளப்புவார்கள். தொழில் துறைகள் சுமாராக நடக்கும். போட்டி பந்தயங்கள் கூடவே கூடாது. கொடுக்கல் வாங்கல் எழுத்து மூலமாக நடக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

Scorpio விருச்சிகம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும். இனிய நாள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவைகள் வெற்றி தருவதாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.

Sagittarius தனுசு இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

Capricorn மகரம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும். பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள்.

Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Pisces மீனம் இன்றைய ராசிபலன்
மீனம்: மீன ராசியினர் இன்று சமூக பணிகளில் ஆர்வம் காட்டக்கூடிய நாள். உங்களின் திட்டம் நிறைவேறும். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல அனுகூலமும், லாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் உரிமை கூடும்.
இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. புதிய முதலீடுகள் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியான திட்டங்கள் நிறைவேற தாமதமாகும். பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலையில் நல்ல மரியாதை கிடைத்தாலும், அதற்கான பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *